Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வீட்டிலும் பராமரிப்புச் சேவைகள் வழங்கப்படும் நிலையங்களிலும் முதுமைக் காலத்தைச் செலவிடுவோரின் எண்ணிக்கை அதிகம்

தொண்டூழிய நல அமைப்புகளின் கீழ் செயல்படும் தாதிமை இல்லம் அதற்காக வசூலிக்கும் கட்டணம் 2,400 வெள்ளிக்கும் குறைவு என்று ஆய்வு கூறியது.

வாசிப்புநேரம் -
வீட்டிலும் பராமரிப்புச் சேவைகள் வழங்கப்படும் நிலையங்களிலும் முதுமைக் காலத்தைச் செலவிடுவோரின் எண்ணிக்கை அதிகம்

(படம்:Today)

சிங்கப்பூரர்களில் மேலும் அதிகமானோர், வீட்டிலும் பராமரிப்புச் சேவைகள் வழங்கப்படும் நிலையங்களிலும் முதுமைக் காலத்தைச் செலவழிக்கின்றனர் எனப் புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.

நீண்டகாலப் பராமரிப்புக்கு தாதிமை இல்லங்களைக் காட்டிலும் அத்தகைய சேவைகளைக் கூடுதலானோர் நாடுவதாகத் தெரியவந்தது.

கடந்தாண்டு, 14,000 பேர் வீட்டிலோ, நிலையத்திலோ சலுகைக் கட்டணத்தில் பராமரிப்புச் சேவைகளைப் பெற்றுக்கொண்டனர்.

ஒப்புநோக்க, தாதிமை இல்லங்களில் பராமரிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதைவிடக் குறைவாய் 10,000ஆக இருந்தது.

சுகாதார அமைச்சு அந்தப் புள்ளிவிவரங்களை அளித்ததாக லியேன்(Lien) அறநிறுவனம் நடத்திய ஆய்வு கூறியது.

தாதிமை இல்லங்களைவிட அத்தகைய பராமரிப்பு இல்லங்களில் மூத்தோரைக் கவனித்துக்கொள்வதற்கான செலவு அதிகம்.

கடுமையான உடற்குறையுள்ள மூத்தோரைப் பார்த்துக்கொள்ள போக்குவரத்து, உணவுக்கான செலவு உட்பட ஒரு மாதத்துக்கு 3,100 வெள்ளி வரை ஆகலாம்.
தொண்டூழிய நல அமைப்புகளின் கீழ் செயல்படும் தாதிமை இல்லம் அதற்காக வசூலிக்கும் கட்டணம் 2,400 வெள்ளிக்கும் குறைவு என்று ஆய்வு கூறியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்