Images
  • motorcycle

பழைய மோட்டார் சைக்கிள்களின் கரியமில வாயு வெளியேற்றத்திற்கான தரநிலை மேலும் கடுமையாக்கப்படும்

பழைய மோட்டார் சைக்கிள்களின் கரியமில வாயு வெளியேற்றத்திற்கான தரநிலை, மேலும் கடுமையாக்கப்படவுள்ளது.

அது 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதியன்று நடப்புக்கு வரும்.

புதிய தரநிலை, 2003-ஆம் ஆண்டு ஜூலை முதல் தேதிக்கு முன் பதிவுசெய்யப்பட்ட உள்ளூர் மோட்டர் சைக்கிள்களுக்குப் பொருந்தும்.

வானங்களின் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதோடு ,சிங்கப்பூரின் காற்றுத் தரத்தை மேம்படுத்தும் முயற்சியின் ஓர் அங்கமாகவும் தரநிலை கடுமையாக்கப்படுகிறது.

அதுகுறித்து, தேசியச் சுற்றுப்புற அமைப்பு அறிவித்தது.

வாகனங்களின் கரியமில வாயு வெளியேற்றம் புதிய தரநிலைக்கு உட்பட்டிருந்தால், உரிமையாளர்கள் அவற்றை 2028-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30-ஆம் தேதிவரை, தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டது.

அதற்குப் பிறகு, அத்தகைய மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்த இயலாது.

2003-ஆம் ஆண்டு ஜூலை முதல் தேதியன்றோ அதன் பிறகோ, பதிவுசெய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், ஏற்கெனவே புதிய தரநிலைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அமைப்பு கூறியது.

வாகனங்கள் தரநிலைகளுக்கு உட்படுவது குறித்து ஐயம் கொண்டவர்கள், அவற்றை முன்கூட்டியே பதிவுப் பட்டியலிலிருந்து நீக்குவதுபற்றிப் பரிசீலிக்கலாம் என்று அமைப்பு சொன்னது.

அவ்வாறு செய்யும் உரிமையாளர்களுக்கு, ரொக்கச் சலுகை வழங்கப்படுகிறது.

வாகனத்தை முன்கூட்டியே கைவிடுவதற்காக அவர்கள், 3,500 வெள்ளிவரை பெறமுடியும்.  

Top