Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ONE Championship கலப்புத் தற்காப்புக்கலைப் போட்டியில் கலந்துகொள்ளவிருந்த 2 உதவியாளர்களுக்கு COVID-19 நோய்த்தொற்று

நாளை இடம்பெறவிருக்கும் ONE Championship என்ற கலப்புத் தற்காப்புக்கலைப் போட்டியில் கலந்துகொள்ளவிருந்த இரண்டு உதவியாளர்களுக்கு COVID-19 நோய் தொற்றியுள்ளது. 

வாசிப்புநேரம் -

நாளை இடம்பெறவிருக்கும் ONE Championship என்ற கலப்புத் தற்காப்புக்கலைப் போட்டியில் கலந்துகொள்ளவிருந்த இரண்டு உதவியாளர்களுக்கு COVID-19 நோய் தொற்றியுள்ளது.

இம்மாதம் 27ஆம் தேதியன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்ட சோதனைக்குப் பின் சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகமும் ONE Championship அமைப்பும் அது குறித்துத் தகவல் அளித்துள்ளன.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.

அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் முன் செய்த சோதனையில் அவர்களுக்கு நோய்த்தொற்று கண்டறியப்படவில்லை.

அவர்கள் இங்கு வந்த பின்னும் நோய்த்தொற்று இல்லை எனச் சோதனை காட்டியது.

இருப்பினும், செவ்வாய்க்கிழமையன்று நோய்த்தொற்று உறுதியானது.

அவர்களுக்கு நோய்த்தொற்று முன்பே இருந்ததாக விசாரணையில் தெரியவந்திருப்பதாகச் சுகாதார அமைச்சு கூறியது.

நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் நோயைப் பரப்புவது சாத்தியம்.

இருவருக்கும் இன்று மீண்டும் சோதனை மேற்கொள்ளப்படும். அவர்களுக்கு நோய்த்தொற்று இல்லை என்றால் மட்டுமே போட்டியில் பங்கெடுக்கலாம்.

சிங்கப்பூர் விதிகளின் படி, வெளிநாட்டுப் போட்டியாளர்களும் அவர்களது பின்னணிக் குழுக்களும் நான்குமுறை நோய்த்தொற்றுச் சோதனையை மேற்கொள்ளவேண்டும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்