Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'one-north' MRT நிலையம் - அதன் தனிச் சிறப்பு?

நம்மில் பலரும் MRT நிலையங்களைப் பயன்படுத்துகிறோம். சமீப ஆண்டுகளில் பல புதிய ரயில் நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன, இன்னும் பல கட்டப்பட்டு வருகின்றன. 

வாசிப்புநேரம் -
'one-north' MRT நிலையம் - அதன் தனிச் சிறப்பு?

படம்: Instagram / Ong Ye Kung

நம்மில் பலரும் MRT நிலையங்களைப் பயன்படுத்துகிறோம். சமீப ஆண்டுகளில் பல புதிய ரயில் நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன, இன்னும் பல கட்டப்பட்டு வருகின்றன.

MRT ரயில் நிலையங்களில் பல புதிய அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, தற்போது, உணவகங்கள், மளிகைக் கடைகள், தேநீர்க் கடைகள் போன்றவற்றை ரயில் நிலையங்களில் காணலாம்.

நிலையங்களில் உள்ள பல வசதிகளை கவனிக்கும் பயணிகள், தேவையானபோது அவற்றைப் பயன்படுத்திவருகின்றனர்.

ஆனால், எத்தனை பேர் MRT நிலையங்களின் பெயர்களையும், ஆங்கிலத்திலும் ஏனைய அதிகாரத்துவ மொழிகளிலும் எவ்வாறு அவை அச்சிடப்பட்டுள்ளன என்பதையும் கவனிக்கிறார்கள்?

'one-north' MRT நிலையம் ஓர் எடுத்துக்காட்டு. தற்போதுள்ள மற்ற அனைத்து நிலையங்களின் பெயர்களின் முதல் எழுத்து Uppercase என்றழைக்கப்படும் பெரிய ஆங்கில எழுத்துருவில் அச்சிடப்பட்டுள்ளன. (உதாரணம்: Lakeside)

ஆனால் one-north நிலைய எழுத்துகள் எல்லாமே வித்தியாசமாக, lowercase எனப்படும் சிறு வடிவ எழுத்துருவில் அச்சிடப்பட்டுள்ளன.

போக்குவரத்து அமைச்சர் ஓங் யீ காங் (Ong Ye Kung) தமது Instagram கணக்கில் அந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.  

நிலையத்தின் எழுத்துக்கள் சிறு வடிவ எழுத்துருவில் இருப்பதற்கான காரணம் தெளிவாக எங்கும் குறிப்பிடப்படவில்லை.

அது குறித்து 'செய்தி' நிலப் போக்குவரத்து ஆணையத்திடம் கேட்டுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்