Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

முன்னைய குடியிருப்பாளர்கள் உட்பட One Pearl Bank விற்பனைக் காட்சியகத்தில் ஆயிரக்கணக்கானோர்

One Pearl Bank கட்டடத்தில் வீடு வாங்கும் நோக்கத்துடன் சுமார் 2,300 பேர் விற்பனைக் காட்சியகத்தில் குழுமினர். 

வாசிப்புநேரம் -
முன்னைய குடியிருப்பாளர்கள் உட்பட One Pearl Bank விற்பனைக் காட்சியகத்தில் ஆயிரக்கணக்கானோர்

படம்: Today/Wong Pei Ting

One Pearl Bank கட்டடத்தில் வீடு வாங்கும் நோக்கத்துடன் சுமார் 2,300 பேர் விற்பனைக் காட்சியகத்தில் குழுமினர்.

அவர்களில் பலர் முந்தைய Pearl Bank Apartments கட்டடத்தில் வீடுகளைக் கொண்டிருந்தவர்கள்.

முன்பு Pearl Bank Apartments கட்டடத்தில் வசித்தவர்களில் குறைந்தது இருவர் அங்கு மீண்டும் வீடு வாங்க விருப்பம் தெரிவித்துக் காசோலை கொடுத்துள்ளனர்.

ஆனால் மற்றும் சிலர் புது வீடுகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகக் குறை கூறியுள்ளனர்.

புதிய 39 மாடிக் கூட்டுரிமை வீட்டுக் கட்டடத்தில், 700 சதுர அடியிலிருந்து 893 சதுர அடி வரை உள்ள ஈரறை வீடுகள் குறைந்தது 1.5 மில்லியன் வெள்ளிக்கு விற்கப்படும் என்று Capitaland கூறியுள்ளது.

ஓரறை வீடுகள் குறைந்தது 1.1 மில்லியன் வெள்ளிக்கு விற்கப்படும்.

Pearl Bank Apartments கட்டடத்தைப் பாதுகாக்கும் முயற்சிகள் கைகொடுக்காமல் கடந்த ஆண்டு ஒட்டுமொத்த விற்பனையில் அது 728 மில்லியன் வெள்ளிக்கு விற்கப்பட்டது.

வரும் வெள்ளிக்கிழமை கட்டடத்தின் முன்னைய குடியிருப்பாளர்களில் கூடுதல் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் வருமாறு Capitaland அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்