Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கிருமிப்பரவல் குறித்துத் தவறான புரிதலை ஏற்படுத்தும் WhatsApp தகவல்கள் - சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

COVID-19 சூழல் குறித்துத் தவறான புரிதலை ஏற்படுத்தும் WhatsApp தகவல்களின் தொடர்பில் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் (Ong Ye Kung) எச்சரித்துள்ளார்.

வாசிப்புநேரம் -

COVID-19 சூழல் குறித்துத் தவறான புரிதலை ஏற்படுத்தும் WhatsApp தகவல்களின் தொடர்பில் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் (Ong Ye Kung) எச்சரித்துள்ளார்.

தீவிர சிகிச்சைப் பிரிவிலுள்ள 40 விழுக்காட்டுப் படுக்கைகள், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட நோயாளிகளால் நிரம்பியுள்ளது.

'தடுப்பூசி போட்டுக்கொண்டால், கிருமித்தொற்றிலிருந்து கடுமையாகப் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கமுடியும் என்றால்..ஏன் அந்த நிலை?' என்று நிலவரத்தை விளக்கக்கோரும் சில WhatsApp தகவல்கள் பரவலாகிவருகின்றன.

குறிப்பிட்ட தகவலை மட்டும் பயன்படுத்தி, மக்களிடையே தவறான புரிதலை ஏற்படுத்துவோர், தீங்கு விளைவிக்கின்றனர். இது வெளிப்படைத்தன்மை பற்றியதோ, தகவல் பற்றியதோ அல்ல. இது சரியான முறையில் கணக்கிடுவதைப் பொறுத்து உள்ளது

என்று திரு. ஓங் கூறினார்.

மக்கள்தொகையில் 100 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்டால், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள். அதனால், தடுப்புமருந்துகளுக்குச் செயலாற்றல் இல்லை என்று அர்த்தமில்லை,

என்று அவர் விவரித்தார்.

அதில் உள்ள அடிப்படையைப் பார்க்கவேண்டும் என்றார் அமைச்சர்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மூத்தோர், சிங்கப்பூரின் மக்கள்தொகையில் 1.5 விழுக்காட்டினராக உள்ளனர்.

கடந்த 28 நாள்களில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தோரின் எண்ணிக்கை, மரணங்கள், ஆகியவற்றில் மூன்றில் இரண்டு பங்கை அவர்கள் வகித்தனர் என்பதைத் திரு. ஓங் சுட்டினார்.

அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்