Images
  • Online Scams
    (படம்: CNA)

8 மாதங்களில் இணைய மோசடியில் 107,000 வெள்ளி பறிபோனது


இணைய மோசடிகள் தொடர்பில் இந்த ஆண்டு 90 புகார்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 107,000 வெள்ளி மோசடி செய்யப்பட்டது.

Lazada, Shopee ஆகிய இணையத்தளங்களில் அதிர்ஷ்டக் குலுக்கு நடத்துவதாகக் கூறி, மோசடிக்காரர்கள் Facebook, Instagram தளங்களில் மக்களை அணுகினர்.

மோசடிக்காரர்கள் மக்களின் தொலைபேசி எண்ணையும், கடன்பற்று அட்டைகளின் படங்களையும் வாங்கிக்கொண்டனர்.

பின்னர், மக்களின் தொலைபேசி எண்ணுக்கு அனுப்பப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் எண்ணைப் (OTP) பகிர்ந்துகொள்ளும்படி கூறினர்.

அதன் வழியாக, மோசடிக்காரர்கள் மக்களின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தினர்.

பின்னர், வங்கிக்கணக்கில் அனுமதியின்றி பரிவர்த்தனைகள் பதிவு செய்யப்பட்டதைக் கவனித்தபோது, ஏமாற்றப்பட்டதை அவர்கள் உணர்ந்தனர்.

காவல் துறை Lazada, Shopee ஆகிய இணையத்தளங்களில் அதைப்போன்று அதிர்ஷ்டக் குலுக்குகள் நடத்தப்படவில்லை என்று கூறியுள்ளது.



 

Top