Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கிருமித்தொற்றுக் காலத்தில் மேலும் அதிகமானோர் இணையத்தின்வழி, தொண்டூழியத்தில் ஈடுபடுகின்றனர்

சிங்கப்பூரில் கிருமித்தொற்றுக் காலத்தின்போது அதிகமானோர் இணையத்தின்வழி, தொண்டூழியத்தில் ஈடுபடுகின்றனர்; நன்கொடை வழங்குகின்றனர்.

வாசிப்புநேரம் -
கிருமித்தொற்றுக் காலத்தில் மேலும் அதிகமானோர் இணையத்தின்வழி, தொண்டூழியத்தில் ஈடுபடுகின்றனர்

(படம்: Gaya Chandramohan)

சிங்கப்பூரில் கிருமித்தொற்றுக் காலத்தின்போது அதிகமானோர் இணையத்தின்வழி, தொண்டூழியத்தில் ஈடுபடுகின்றனர்; நன்கொடை வழங்குகின்றனர்.

ஈராண்டுக்கு ஒருமுறை வெளியிடப்படும் தனிநபர் நன்கொடை ஆய்வு அதனைப் புலப்படுத்தியது.

ஆய்வில் சுமார் 2,000 பேர் கலந்துகொண்டனர்.

இவ்வாண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில்,
இணையம்வழி தொண்டூழியத்தில் ஈடுபடுவோரின் விகிதம் 29 விழுக்காடு கூடியுள்ளது தெரியவந்தது.

இணையம்வழி கிடைத்த நன்கொடைகள் 37 விழுக்காடு அதிகரித்துள்ளன.

கடந்த ஓராண்டில் சிங்கப்பூர் மக்களில் 60 விழுக்காட்டினர் நன்கொடை வழங்கியுள்ளனர்.

22 விழுக்காட்டினர் தொண்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் சிங்கப்பூரின் மொத்த நன்கொடை விகிதம் 19 விழுக்காடு சரிவு கண்டது.

தொண்டூழியத்தில் ஈடுபட்டோரின் மொத்த விகிதம் 7 விழுக்காடு குறைந்தது.

கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகள் அந்தச் சரிவுக்குக் காரணமாகக் கருதப்படுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்