Images
  • OYK
    (கோப்புப் படம்: Justin Ong)

நாட்டின் எல்லைகளைத் திறப்பதில் கொள்கை வகுப்பாளர்கள் கவனம் செலுத்தவேண்டும்: சுகாதார அமைச்சர்

சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் (Ong Ye Kung), கிருமிப்பரவலால் ஏற்படும் மரணங்களைக் குறைக்கும் அதேவேளையில், எல்லைகளைத் திறப்பதில் கொள்கை வகுப்பாளர்கள் கட்டாயம் கவனம் செலுத்தவேண்டும் என்று கூறியுள்ளார்.

ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசியச் சுகாதார உச்சநிலை மாநாட்டில் அவர் அதனைத் தெரிவித்தார்.

எல்லைகளைத் திறக்கும் சிங்கப்பூரின் உத்தி, உயர்வான தடுப்பூசி விகிதம், கிருமித்தொற்றுக் கட்டுப்பாடு ஆகியவற்றைச் சார்ந்திருப்பதாகத் திரு. ஓங் குறிப்பிட்டார்.

உலகிலுள்ள பல நாடுகளிலும் இடங்களிலும், கிருமித்தொற்று விகிதம் கிட்டத்தட்ட ஒரே அளவில் இருப்பதாக அவர் சொன்னார்.

எனவே, அந்த நாடுகளோடு எல்லைகளைத் திறக்கும் சாத்தியம் உள்ளது.

கிருமித்தொற்று விகிதம் மேலும் குறைந்ததும் சிங்கப்பூருக்கும் ஹாங்காங்கிற்கும் இடையிலான சிறப்புப் பயண ஏற்பாடு சாத்தியமாகலாம் என்றார் திரு. ஓங்.  

Top