Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஆர்ச்சர்ட் வட்டாரத்தில் புகைபிடிப்பது தொடர்பான விதிமுறையைப் பலர் பின்பற்றுகின்றனர்

ஆர்ச்சர்ட் வட்டாரத்தில் ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு வெளியே புகைபிடித்தோருக்கு கொடுக்கப்பட்ட அபராதச் சீட்டுகளின் எண்ணிக்கை 30 விழுக்காடு குறைந்துள்ளது.    

வாசிப்புநேரம் -
ஆர்ச்சர்ட் வட்டாரத்தில் புகைபிடிப்பது தொடர்பான விதிமுறையைப் பலர் பின்பற்றுகின்றனர்

படம்: AFP

ஆர்ச்சர்ட் வட்டாரத்தில் ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு வெளியே புகைபிடித்தோருக்கு கொடுக்கப்பட்ட அபராதச் சீட்டுகளின் எண்ணிக்கை 30 விழுக்காடு குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரலில் புகைபிடிப்பதற்கான தடை நடப்புக்கு வந்தது...

ஏப்ரல்: நாளொன்றுக்கு 20 அபராதச் சீட்டுகள்.

மே - டிசம்பர்: நாளொன்றுக்கு 14 அபராதச் சீட்டுகள்.

ஒவ்வொரு விதிமீறலுக்கும் விதிக்கப்படும் அபராதம்: 200 வெள்ளி

ஆர்ச்சர்ட் வட்டாரத்தில் புகைபிடிப்போருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள்: 54

அவ்விடங்களைத் தவிர வேறு இடங்களில் மக்கள் புகைபிடிக்கிறார்களா என்பதைக் கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு வெளியே புகைபிடிப்போருக்கு அதிகபட்ச அபராதமாக 1,000 வெள்ளி வரை விதிக்கப்படும்.

கடந்த ஜூலையில் மேற்கொள்ளப்பட்ட கருத்தாய்வில் கலந்துகொண்ட 1,000 பேரில் 80 விழுக்காட்டினர் ஆர்ச்சர்ட் வட்டாரத்தில் நடப்பில் இருக்கும் தடையை வரவேற்றுள்ளனர்.

அவர்களில் பலர் புகைபிடிப்பவர்கள் என்பதைத் தேசியச் சுற்றுப்புற அமைப்பு சுட்டியது.    

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்