Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Orchard Towers கொலை வழக்கு - சந்தேக நபரின் ரத்தம் படிந்த டி-சட்டையை அப்புறப்படுத்திய ஆடவருக்குச் சிறை

Orchard Towers கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆடவருடைய ரத்தம் படிந்த டி-சட்டையை அப்புறப்படுத்திய ஆடவருக்கு 5 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

Orchard Towers கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆடவருடைய ரத்தம் படிந்த டி-சட்டையை அப்புறப்படுத்திய ஆடவருக்கு 5 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

லூ பூன் சோங் (Loo Boon Chong) எனும் அந்த 27 வயது ஆடவருக்கு 1,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.

2019-ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி நடந்த Orchard Towers சம்பவத்தில் 31 வயது சத்தீஷ் நோயல் கோபிதாஸ் மாண்டார்.

அவரைக் கொலை செய்ததாக டான் சென் யாங் (Tan Sen Yang) எனும் ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அப்போது நடந்த கைகலப்பில் ஈடுபடாத லூ, சம்பவம் நேரந்த பிறகு டானைத் தனது வீட்டிற்கு அழைத்து சென்றதாகக் கூறப்பட்டுள்ளது.

டானைத் தனது வீட்டில் குளிக்க அனுமதித்ததுடன், அவர் அணிந்த ரத்தம் படிந்த டி-சட்டையை அப்புறப்படுத்தினார்.

லூ, டி-சட்டையைக் குப்பையில் போட்டதாகவும் டான் அணிவதற்குப் புதிய சட்டையைக் கொடுத்ததாவும் கூறப்பட்டது.

சம்பவத்தின் தொடர்பில் 7 பேர் தொடக்கத்தில்
கொலைக் குற்றச்சாட்டை எதிர்நோக்கினர்.

இருப்பினும், 6 பேருக்குக் குற்றச்சாட்டு குறைக்கப்பட்டுள்ளது.

டான் மட்டுமே கொலைக் குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார்.

அவரின் வழக்கு இன்னும் நடைபெறவில்லை. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்