Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஆஸ்கர் 2021 விருது நிகழ்ச்சியை, ஏப்ரல் 26ஆம் தேதியன்று மீடியாகார்ப் நேரடியாக ஒளிபரப்பும்

ஆஸ்கர் 2021 விருது நிகழ்ச்சியை, ஏப்ரல் 26ஆம் தேதியன்று மீடியாகார்ப் நேரடியாக ஒளிபரப்பும்

வாசிப்புநேரம் -
ஆஸ்கர் 2021 விருது நிகழ்ச்சியை, ஏப்ரல் 26ஆம் தேதியன்று மீடியாகார்ப் நேரடியாக ஒளிபரப்பும்

படம்: The Oscars

மீடியாகார்ப், 93ஆவது ஆஸ்கர் விருதுகளை meWATCH, ஒளிவழி 5 ஆகியவற்றில் நேரடியாக ஒளிபரப்பவிருக்கிறது.

இம்மாதம் 26ஆம் தேதி, காலை 6.30மணிக்கு சிவப்புக் கம்பள வரவேற்புடன் தொடங்கி, காலை 8 மணிக்கு மூன்று மணி நேர முக்கிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.

ஆஸ்கர் விருதுகள் பொதுவாக பிப்ரவரியில் நடைபெறும். ஆனால் COVID-19 கிருமித்தொற்று காரணமாக இந்த ஆண்டு ஏப்ரல் வரை தள்ளிவைக்கப்பட்டது.

லாஸ் ஏஞ்சலிஸில் (Los Angeles) நடத்தப்படும் விருது நிகழ்ச்சி, Dolby Theatre அரங்கத்திலிருந்து ஒளிபரப்பாகும்.

விருது பெறுபவர்கள், அவர்களின் விருந்தினர்கள், படைப்பாளர்கள் மட்டும் விருது நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.

- TODAY/8 DAYS 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்