Images
  • Singapore
    படம்: Google

சிங்கப்பூர் என்ற பெயரில் வேறு ஊர்கள் இருக்கின்றன என்பது தெரியுமா?

சிங்கப்பூரை வளர்ச்சி காணாத ஓர் இடம் என்று இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் ஒருவர் அண்மையில் கூறியிருந்தார். அதற்கு சிங்கப்பூரர்கள் பலர் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தனர்.

ஆனால் அவர் குறிப்பிட்டது நமது சிங்கப்பூரை அல்ல என்பது பின்னர் தெரியவந்தது.

சிங்கப்பூர் என்ற பெயரில் ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் ஊர்கள் இருக்கின்றன.

தென் ஆப்பிரிக்காவின் லிம்ப்போப்போ (Limpopo) பகுதியில் சிங்கப்பூர் என்ற ஓர் ஊர் உள்ளது.

Limpopo பகுதி வனவிலங்குக் காப்பகங்களுக்குப் பெயர் பெற்றது.

வரைபடத்தில் பரந்த பகுதியில் இருக்கும் சிங்கப்பூர் நம் நாட்டைப் போல சிறிய புள்ளியாகத் தென்பட்டது.

மற்றொன்று, அமெரிக்காவின் மிச்சிகனில் இருக்கும் சிங்கப்பூர் என்ற கிராமம்.

ஒரு காலத்தில் அது துறைமுகமாக இருந்ததாகவும், பின் 1871-ஆம் ஆண்டு ஏற்பட்ட தீயில் அது முழுமையாக நாசமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

தற்போது அது பெயரளவில் மட்டுமே உள்ள ஓர் இடமாக இருக்கிறதாம். அங்கு குடியிருப்புகள் ஏதும் இல்லை.
 

Top