Images
  • otters condo (1)
    (படம்: Veron Tan)

கூட்டுரிமை வீட்டு வளாகத்தில் நுழைந்து, மீன்களைச் சாப்பிட்ட நீர்நாய்கள் ; வருத்தமடைந்த குடியிருப்பாளர்கள்

அலெக்சாண்டிரா ரோட்டுக்கு அருகே (Alexandra Road) அமைந்துள்ள கூட்டுரிமை வீட்டு வளாகத்தில் நீர்நாய்கள் (otters) நுழைந்ததாகவும், அங்குள்ள குளத்தில் மீன்களைச் சாப்பிட்டதாகவும் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நேற்று மாலை, The Crest கூட்டுரிமை வீட்டு வளாகத்தில் நேர்ந்தது.

அதனைக் கண்ட குடியிருப்பாளர்கள் சிலர் CNA-யிடம் அது பற்றித் தகவல் அளித்தனர்.

சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளியில், 12 நீர்நாய்கள் வளாகத்திற்குள் நுழைவதும், நீச்சல் குளம், மீன்கள் இருந்த குளம் ஆகியவற்றில் நகர்வதும் தெரிகிறது.

அந்த நீர்நாய்கள், குடியிருப்பாளர்கள் தீனி போட்டு வந்த கிட்டத்தட்ட அனைத்து மீன்களையும் சாப்பிட்டதாகக் குறிப்பிடப்பட்டது.

அதனைக் கண்டு, பிள்ளைகள் சிலர் அச்சம் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குளங்களைச் சுத்தம் செய்வதற்குத் தாங்கள் பணம் செலவிடவேண்டியிருக்கும் என்று குடியிருப்பாளர்கள் சிலர் குறிப்பிட்டனர்.

தேசியப் பூங்காக் கழக அதிகாரிகள் பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்றதாகக் கூறப்பட்டது. 

Top