Images
  • public servants

பொதுச் சேவை ஊழியர்களைத் துன்புறுத்திய 7 ஆடவர்கள்மீது இன்று குற்றச்சாட்டுப் பதிவு

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

பொதுச் சேவை ஊழியர்களைத் துன்புறுத்தியதன் தொடர்பில் 19 லிருந்து 57 வயதுக்கு இடைப்பட்ட ஆடவர்கள் 7 பேர் மீது இன்று குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும்.

ஏழு வெவ்வேறு சம்பவங்களில் ஆடவர்கள் பொதுச் சேவை ஊழியர்களைத் திட்டியதாகவும், அவர்களைத் தாக்கியதாகவும் நம்பப்படுகிறது.

கடந்த ஆண்டு ஏப்ரலிலிருந்து இவ்வாண்டு ஜனவரி வரை அந்த 7 சம்பவங்கள் பதிவாகின.

சுங்காய் புலோ சதுப்பு நிலத்தில் மீன்பிடிக்க அனுமதி இல்லை என்று தேசிய பூங்கா கழக அதிகாரி சொன்னபோது, 19 வயது ஆடவர் அந்த அதிகாரியைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

நார்த் பிரிட்ஜ் ரோட்டில் குப்பை கிடப்பதைச் சோதித்த தேசிய சுற்றுப்புற அமைப்பு அதிகாரியை 57 வயது ஆடவர் தள்ளி விட்டதாக நம்பப்படுகிறது.

ஏனைய ஐந்து வழக்குகளும் இதே போன்றே அமைந்துள்ளன.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆடவர்களுக்கு அபராதத்துடன் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம். கடமையைச் செய்யும் பொதுச் சேவை அதிகாரிகளுக்கு எதிரான வன்முறையைச் சகித்துக் கொள்ள முடியாது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

 

Top