Images
  • picture3

வகுப்பறையைத் தாண்டி கல்வி அனுபவத்தைப் பெற்ற பெற்றோர் மாணவர்கள்

Dairy Farm Quarryஇல் இன்று (நவம்பர் 10) பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் Open House நிகழ்ச்சிக்கு கல்வியமைச்சு ஏற்பாடு செய்திருந்தது. 

சுற்றுச்சூழலை அடிப்படையாகக் கொண்ட  நிலையத்தில் மாணவர்களும் பெற்றோரும் சேர்ந்து மீன் பிடிப்பது, பாறையேறுவது போன்ற பல்வேறு சாகசங்களில் ஈடுபட்டனர்.


பள்ளிகளில் நடத்தப்படும் வெளிப்புற பாடங்களைத் தவிர்த்து, தொடக்கநிலை 5 லிருந்து உயர்நிலை 2 வரை பயிலும் மாணவர்கள் தங்கள் பள்ளி வாழ்கையில் இரு முறையாவது வெளிப்புறக் கற்றல் நிலையங்களில் தங்கி அங்கு ஏற்பாடு செய்யப்படும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். 

பாடங்களில் பயின்றவற்றை நேரடியாக அனுபவித்துப் பார்த்து, வகுப்பறையில் பெறமுடியாத திறன்களையும் அவர்கள் கற்றுக்கொள்கின்றனர்.


வெளிப்புறக் கற்றல் நடவடிக்கைகளில் மாணவர்கள் என்னென்ன கற்றுக்கொள்வர் என்பதை முன்னோட்டமாகக் காட்டுவதுடன், பிள்ளைகளின் வெளிப்புறக் கற்றல் பற்றிப் பெற்றோர் தெரிந்து கொள்ள வாய்ப்பளித்தது இன்றைய நிகழ்ச்சி.

வார இறுதி நாளை பசுமையான சுற்றுச்சூழலில் செலவிடவும் அது ஒரு வாய்ப்பாக அமைந்தது.

Top