Images
  • 31 May Business confidence (1)

சுயதொழில் செய்பவர்களுக்கும் முதன்முறை வேலை தேடுபவர்களுக்கும் ஆதரவுத் திட்டங்கள்

COVID-19 கிருமிப் பரவலால் பொருளியல் மெதுவடைந்துள்ளதால், முதன்முறை வேலை தேடுபவர்களுக்கும் சுயதொழில் செய்பவர்களுக்கும் கூடுதல் நிதி ஆதரவு வழங்கப்படும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் தெரிவித்துள்ளார்.

மீள்திறனுக்குரிய 48 பில்லியன் வெள்ளி வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் அந்த நிதியுதவி வழங்கப்படும்.

சுயதொழில் செய்பவர்களுக்கு 9 மாதங்களுக்கு மாதந்தோறும்
1,000 வெள்ளி வழங்குவதற்கு 1.2 பில்லியன் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.

சுயதொழில் செய்பவர்களுக்கான பயிற்சி படித்தொகை மே மாதத்திலிருந்து மணிக்கு 7.50 வெள்ளியிலிருந்து 10 வெள்ளிக்கு அதிகரிக்கப்படும்.

அவர்களின் பயிற்சிக் கட்டணங்களுக்கும் 90 விழுக்காடு வரை சலுகை வழங்கப்படும்.
 

Top