Images
  • oyk
    படம்: Facebook/ Ong Ye Kung

சிங்கப்பூர் எல்லையை ஏன் திறக்க வேண்டும் ? தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோருக்கு ஏன் கடுமையான கட்டுப்பாடுகள் ? - கேள்விகளுக்குப் பதில் கூறும் அமைச்சர்கள்

சுகாதார அமைச்சர் ஓங் யீ காங்கும் நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங்கும் COVID-19 தொடர்பான சில கேள்விகளுக்குக் காணொளி மூலம் பதில் கூறியுள்ளனர்.

இரண்டு அமைச்சர்களும் COVID-19 நோய்த்தொற்றுக்காக அமைக்கப்பட்ட அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழுவை வழி நடுத்துவோரும் கூட.

அமைச்சர்கள் Facebook பக்கத்தில் காணொளியை வெளியிட்டனர்.

சில கேள்விகளும் அவற்றுக்கான பதில்களும் இதோ....

COVID-19 தடுப்பூசிகள் 6 மாதத்திற்குப் பிறகு பலனின்றிப் போகுமா ? அதனால்தான் Booster தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமா ?

 தடுப்பூசி போட்ட 6 மாதத்திற்குப் பிறகு அதன் சக்தி முழுமையாகச் செயலிழந்து போகாது. அது காலப்போக்கில் மெல்ல மெல்லக் குறையும். அதனால் இரண்டாம் தடுப்பூசி போட்டு 6இலிருந்து 9 மாதத்திற்குள் Booster தடுப்பூசி போட்டுக்கொள்வது முக்கியம்.

நோய்த்தொற்றைப் பற்றி அஞ்சத் தேவையில்லை என்றால் ஏன் கடுமையான கட்டுப்பாடுகள் ?

 நோய்த்தொற்றைப் பற்றி அஞ்சத் தேவையில்லை. வாழ்க்கையை இயல்பாகத் தொடரலாம். ஆனால் விதிமுறைகளைப் பின்பற்றுவது பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும்


தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோருக்கு ஏன் கடுமையான கட்டுப்பாடுகள் ?

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோரின் நலன் கருதித்தான் அவர்களுக்குக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருந்து நோய்த்தொற்று ஏற்பட்டால் அவர்கள் மோசமான உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.

அவர்களைக் காக்கும் விதமாகத்தான் கட்டுப்பாடுகள் உள்ளன.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் கடைத்தொகுதிகளுக்குள் உள்ள மருந்தகங்களுக்குச் செல்ல முடியுமா ?

ஆம், முடியும்... இதில் சில நீக்குப்போக்குகள் உண்டு...

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் கடைத்தொகுதிகளுக்குள் இருக்கும் குழந்தைப் பராமரிப்பு நிலையத்திற்குள் குழந்தைகளை விட்டுவிட்டு வரமுடியுமா ?

ஆம், முடியும்... இதிலும் சில நீக்குப்போக்குகள் உள்ளன.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் ஹோட்டல்களில் தங்க முடியுமா ?

ஆம், முடியும். ஆனால் ஹோட்டலில் உள்ள உணவகங்களுக்குள் செல்ல அனுமதி இல்லை.

ஏன் இப்போது சில நாடுகளின் பயணிகளுக்கு எல்லைகளைத் திறந்துவிடுகிறோம் ?

4 காரணங்கள் உள்ளன

* சிங்கப்பூரர்கள் படிப்பு, வேலை, குடும்பத் தேவை, பொழுதுபோக்கு ஆகியவற்றுக்காகப் பயணம் செய்யவேண்டும்.

* விமானத் துறையை நம்பி 200,000 அதிகமான ஊழியர்கள் உள்ளனர்.

* நோய்த்தொற்றுச் சூழல் உலகில் மாறி வருகிறது. சில நாடுகளில் கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை நிலையாகி வருகிறது.

* நாம் சிறிய நாடு, மற்ற நாடுகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கவேண்டியது மிக முக்கியமானது.

மேல் விவரங்கள்... covid.gov.sg இணையப்பக்கத்தில்...
 

Top