Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'ராபிள்ஸ் கல்வி நிலைய மாணவர் உடல்நலம் சரியில்லாமல் இருக்கும்போது பள்ளிக்குச் செல்லாமல் பொறுப்புடன் நடந்துகொண்டார்'

சிங்கப்பூரில் நேற்று COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட மூவரில் ராபிள்ஸ் கல்வி நிலைய மாணவரும் ஒருவர். அவருக்கு வயது 12.

வாசிப்புநேரம் -
'ராபிள்ஸ் கல்வி நிலைய மாணவர் உடல்நலம் சரியில்லாமல் இருக்கும்போது பள்ளிக்குச் செல்லாமல் பொறுப்புடன் நடந்துகொண்டார்'

படம்: Google Maps/Raffles Institution

சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டுள்ள ஆக இளம் வயது மாணவர் அவர்.

உடல்நலம் சரியில்லாமல் இருக்கும்போது அந்த மாணவர் பள்ளிக்குச் செல்லாமல் பொறுப்புடன் நடந்துகொண்டதாகக் கல்வி அமைச்சர் ஓங் யீ காங் (Ong Ye Kung) தமது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். பள்ளிகளில் கிருமித்தொற்றை எதிர்கொள்ள பல நடவடிக்கைகள் நடப்பில் உள்ளன.

மாணவர்கள் தள்ளித்தள்ளி இருப்பது அவற்றுள் ஒன்று. அதன்மூலம் கிருமித்தொற்று ஏற்படும் சாத்தியம் வெகுவாகக் குறையும்.

விரைவில் அந்த மாணவர் குணமடைய வேண்டும் எனத் திரு. ஓங் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் அனைவரும் நல்ல சுகாதார பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்