Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

முதலாளிகள், ஊழியர்கள் என இருதரப்பையும் ஒன்றுக்கொன்று பொருத்தமாக வைத்திருப்பது SkillsFuture திட்டத்தின் முக்கிய அம்சம்: அமைச்சர் ஓங்

SkillsFuture திட்டத்தின் அடுத்த கட்டத்தில், முதலாளிகள், ஊழியர்கள் என இருதரப்பையும் ஒன்றுக்கொன்று பொருத்தமாக வைத்திருப்பது முக்கிய அம்சம் என்று கல்வி அமைச்சர் ஓங் யீ காங் (Ong Ye Kung) கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
முதலாளிகள், ஊழியர்கள் என இருதரப்பையும் ஒன்றுக்கொன்று பொருத்தமாக வைத்திருப்பது SkillsFuture திட்டத்தின் முக்கிய அம்சம்: அமைச்சர் ஓங்

(படம்: Ang Hwee Min/ CNA)


SkillsFuture திட்டத்தின் அடுத்த கட்டத்தில்,
முதலாளிகள், ஊழியர்கள் என இருதரப்பையும் ஒன்றுக்கொன்று பொருத்தமாக வைத்திருப்பது முக்கிய அம்சம் என்று கல்வி அமைச்சர் ஓங் யீ காங் (Ong Ye Kung) கூறியுள்ளார்.

இதுவரை 500,000 சிங்கப்பூரர்கள் SkillsFuture வழங்குதொகையைப் பயன்படுத்தித் தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொண்டுள்ளனர்.

இந்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் அதற்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், மேலும் அதிகமானோர் அதனால் பலனடைவர் என்று அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது.

SkillsFuture திட்டத்தின் அடுத்த கட்டம் 3 அம்சங்களில் கவனம் செலுத்துவதாகக் கல்வி அமைச்சர் ஓங் யீ காங் கூறினார்.

நிறுவனங்கள் அவற்றின் ஊழியர்களுக்கு மட்டுமின்றி அவை சார்ந்த துறை முழுவதற்குமான திறன் நிலையை உயர்த்தவேண்டும்.

இரண்டாவதாக, ஊழியர்களின் தேவைகளுக்கேற்ற பயிற்சி வகுப்புகளை வழங்குவதில் கவனம் செலுத்தப்படவேண்டும்.

மூன்றாவதாக, தனிநபர்கள் அவர்கள் விரும்பும் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் இடங்களைக் கண்டுபிடிக்கக் கூடுதல் வழிகாட்டுதல் தேவை.

தற்போது, 90 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் வேலையுடன் தொடர்புடைய பயிற்சி வகுப்புகளுக்காகத் திட்டத்தைப் பயன்படுத்தியிருப்பதாகத் திரு. ஓங் குறிப்பிட்டார்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்