Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புலாவ் உபினில் புதிதாக 5 உயிரினங்கள் கண்டுபிடிப்பு

புலாவ் உபினில் புதிதாக 5 உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசியப் பூங்கா வாரியம் இன்று தெரிவித்தது.

வாசிப்புநேரம் -
புலாவ் உபினில் புதிதாக 5 உயிரினங்கள் கண்டுபிடிப்பு

(படம்: NParks/David Li)

புலாவ் உபினில் புதிதாக 5 உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசியப் பூங்கா வாரியம் இன்று தெரிவித்தது.

கடந்த ஆண்டு புலாவ் உபினில் தேசியப் பூங்கா வாரியம் நடத்திய ஆய்வில் அவை கண்டுபிடிக்கப்பட்டன.

இரண்டு வகை வெளவால்கள், ஒரு பூச்சி, ஒரு பறவை, ஒரு சிலந்தி ஆகியவை அந்த 5 புதிய உயிரினங்கள்.

ஏழாவது உபின் தினத்தில் தொடக்க உரையாற்றிய, தேசிய வளர்ச்சிக்கான இரண்டாவது அமைச்சர் டெஸ்மண்ட் லீ,
"இந்தக் கண்டுபிடிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை" என்று கூறினார்.

புலாவ் உபினின் வேறுபட்ட பல்லுயிரின இயல்புக்கு இவை மேலும் வலுசேர்ப்பதாக அவர் சொன்னார்.

சிங்கப்பூரின் இயற்கை மரபுடைமையைப் பாதுகாக்கும் நமது பங்கை, இந்தக் கண்டுபிடிப்பு நினைவுபடுத்துவதாகவும் திரு. லீ குறிப்பிட்டார்.

தீவின் பழமையான அழகு, மரபு, இயற்கை சூழல் ஆகியவற்றைக் கொண்டாட உபின் தினம் ஒரு மாதம் கொண்டாடப்படுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்