Images
  • p1 reg
    (படம்: Mediacorp)

தொடக்கநிலை ஒன்றுக்கான 2C பதிவு இணையத்தில் நாளை தொடக்கம்

தொடக்கநிலை ஒன்றுக்கான 2C பதிவு இணையத்தில் நாளை தொடங்குகிறது.

இதுவரை விண்ணப்பம் செய்யாதவர்கள் C பிரிவுப் பதிவில் இடம் கிடைக்காதவர்கள் ஆகியோருக்காக உள்ளதுதான் 2C பிரிவு.

நாளைக் காலை 9 மணி முதல் நாளை மறுதினம் மாலை 4.30 மணி வரை அதற்கு விண்ணப்பிக்கலாம்.

விரும்பிய பள்ளிக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பிக்க விரும்புவோர் நாளை மறுதினம் அல்லது வரும் புதன்கிழமையன்று சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்குச் செல்லலாம்.

காலை 8 மணியிலிருந்து 11 மணி வரை அல்லது மதியம் 2.30 முதல் 4.30 மணி வரை பள்ளிக்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.

21ஆம் தேதி அதாவது அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமையன்று முடிவுகள் வெளியிடப்படும்.

184 பள்ளிகளில் 102இல் குறிப்பிட்ட இடங்களுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன.

Top