Images
  • passion cares
    (படம்: People's Association)

அடுத்த ஆண்டு 15,000க்கும் அதிகமான PAssion CARES சமூக நிகழ்ச்சிகள்

வசதி குறைந்தோருக்குச் சமூகத்தின் ஆதரவைத் திரட்ட, மக்கள் கழகம், அடுத்த ஆண்டு, 15,000க்கும் அதிகமான PAssion CARES சமூக நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யவிருக்கிறது.

PAssion CARES For You எனும் அந்தத் திட்டம் இன்று தொடங்குகிறது.

திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் 125 குடும்பங்களைச் சேர்ந்த, 250 வசதி குறைந்தவர்கள், தெம்பனீஸ் பகுதியில் உள்ள, Giant Hypermart பேரங்காடியில் வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொள்வர்.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் பொருள்களை வாங்கிக்கொள்ள 200 வெள்ளி தொகைக்குச் சமமான புள்ளிகள் வழங்கப்படும்.
கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட PAssion CARES திட்டத்தின் மூலம் அதற்கான நிதி திரட்டப்பட்டது.

தேர்ந்தெடுக்கப்பட்ட சமூக நிகழ்ச்சிகளில், PAssion Card உறுப்பினர்கள் தங்கள் PAssion அட்டை அல்லது PAssion POSB ரொக்க அட்டையைத் தட்டிச் செல்லும்போது புள்ளிகள் சேகரிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு முறையும் அட்டையைத் தட்டும்போது, 7.5 புள்ளிகள் சமூகத் திட்டங்களுக்கு வழங்கப்படும்.

PAssion Card உறுப்பினர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர்களின் அட்டையிலும், 7.5 புள்ளிகள் சேர்க்கப்படும்.

Top