Images
  • pandas
    (படம்: Wildlife Reserves Singapore)

விலங்குத் தோட்டத்தில் பாண்டாக்களுக்குப் பிறந்தநாள் கொண்டாட்டம்

சிங்கப்பூர் விலங்குத் தோட்டத்தின் ஆற்று சஃபாரியில் பாண்டாக்கள் காய் காயும் ஜியா ஜியாவும் இன்று பிறந்த நாளைக் கொண்டாடின.

ஆண் பாண்டா காய் காய்க்கு இன்று 11 வயது பூர்த்தியாகிறது.

இம்மாதம் 3ஆம் தேதி, பெண் பாண்டா ஜியா ஜியா பத்து வயதை எட்டியது.


ஆப்பிள், கேரட் ஆகியவற்றைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட 1.2 மீட்டர் உயரமுள்ள மூங்கில் கோபுரம் - பாண்டாக்களுக்குப் பிறந்த நாள் பரிசாகக் கொடுக்கப்பட்டது.

17 கிலோகிராம் எடைகொண்ட மூங்கில் கோபுரங்களை, விலங்குத் தோட்டப் பராமரிப்பாளர்கள் தயாரித்தனர்.

பாண்டாக்களுக்கு அத்தகைய தீனிகளில் விருப்பம் அதிகம் என்று அவர்கள் கூறினர்.

6 ஆண்டுக்கு முன்னர், சிங்கப்பூர் விலங்குத் தோட்டத்துக்கு வந்த காய் காயும், ஜியா ஜியாவும், இன்றும் பார்வையாளர்களிடையே மிகவும் பிரபலமான நட்சத்திரங்கள்.  

Top