Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பாண்டாக் குட்டி கண்விழித்து உலகைக் கண்ட தருணம்!

சிங்கப்பூர் விலங்குத் தோட்டத்தில் ஜியா ஜியா (Jia Jia), காய் காய் (Kai Kai) ஜோடிக்குப் பிறந்த பாண்டாக் குட்டி முதல்முறையாகக் கண் விழித்துள்ளது.

வாசிப்புநேரம் -
பாண்டாக் குட்டி கண்விழித்து உலகைக் கண்ட தருணம்!

(படம்: WILDLIFE RESERVES SINGAPORE)

சிங்கப்பூர் விலங்குத் தோட்டத்தில் ஜியா ஜியா (Jia Jia), காய் காய் (Kai Kai) ஜோடிக்குப் பிறந்த பாண்டாக் குட்டி முதல்முறையாகக் கண் விழித்துள்ளது.

பிறந்த 40ஆவது நாளில் (செப்டம்பர் 22), அந்த ஆண் குட்டி கண்களைத் திறந்ததாகச் சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகம் தெரிவித்தது.

பாண்டாக் குட்டி தொடர்ந்து வளர்ந்து வருவதாகவும் கூறப்பட்டது.

அதன் எடை 1,870 கிராமுக்கு அதிகரித்துள்ளது.

சென்ற வாரத்தைக் காட்டிலும், அது சுமார் 370 கிராம் எடை கூடியுள்ளது.

குட்டி ஆகஸ்ட் 14ஆம் தேதி பிறந்தது.

பாண்டாக் குட்டிக்கு வரும் நவம்பர் 21ஆம் தேதிக்குள் பெயர் வைக்கப்படும் என்று முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது.

பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில், அதிக வாக்குகளைப் பெறும் பெயர், பாண்டாக் குட்டிக்குச் சூட்டப்படும் என்று காப்பகம் குறிப்பிட்டிருந்தது.

(படம்: WILDLIFE RESERVES SINGAPORE)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்