Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பல படங்கள் பல கதைகள்.... COVID-19 சூழலில் சிங்கப்பூர்வாசிகளின் வாழ்க்கை

பல படங்கள் பல கதைகள்.... COVID-19 சூழலில் சிங்கப்பூர்வாசிகளின் வாழ்க்கை

வாசிப்புநேரம் -

COVID-19 சூழலில் சிங்கப்பூர்வாசிகளின் வாழ்க்கை எப்படி இருக்கிறது
என்பதை எடுத்துக்காட்டுகிறது
சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தின் கண்காட்சி.

5 கருப்பொருள்களின் கீழ் 272 படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

21 நிமிடப் படமும் உண்டு.

வெளிநாட்டு ஊழியர்கள், சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள், பொதுமக்கள், முன்னணி ஊழியர்கள் என அனைவரின் வாழ்க்கை முறையும் அந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.

படங்கள் எடுக்க, சிங்கப்பூரின் முன்னணிப் புகைப்படக் கலைஞர்கள் அரும்பொருளகத்திற்கு உதவினர்.

அவர்களில் ஒருவர் பிரையன் தியோ, அவர் செய்தியிடம் தம் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

தற்போது பள்ளிகளில் உள்ள நடைமுறைகளை வைத்து நான் படங்கள் எடுத்தேன், மாணவர்கள் எப்படி இந்தச் சூழலை எதிர்கொள்கின்றனர் என்பதை என் படங்கள் காட்டும்.

பொதுத்தேர்தலின் போது சில படங்கள் எடுத்தோம், அதிரடித் திட்டத்தின் போது பல இடங்கள் வெறுச்சோடிக் கிடந்தன. எதிர்காலத்தில் வருபவர்கள் அதையெல்லாம் பார்க்க வேண்டும் என்ற கோணத்தில் படங்கள் எடுத்தேன்.

சுமார் ஓராண்டுக்கு முன்னர் சிங்கப்பூரில் COVID-19 நோய்ப்பரவல் தொடங்கியது.

பிறகு நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டன.

அதனால் மக்களின் வாழ்க்கைமுறை யாரும் எண்ணிப்பார்க்க முடியாத அளவில் மாறியது.

முகக்கவசம் அணிவது கட்டாயம், பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கிருமிப் பரவலை முறியடிக்கும் அதிரடித் திட்டம் போன்ற நடவடிக்கைகளின் போது மக்களின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதைப் படங்கள் விவரிக்கின்றன.

சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தில் பிப்ரவரி 27 முதல் ஆகஸ்ட் 29ஆம் தேதி வரை படக் கண்காட்சியைப் பொதுமக்கள் பார்க்கலாம்.

அனுமதி இலவசம்.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்