Images
  • New Faces Bt Panjang SMC
    (படம்: Jo Yee Koo)

புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதி: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லியாங் எங் ஹுவாவை எதிர்த்து பால் தம்பையா போட்டி

புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதியில் இம்முறை மக்கள் செயல் கட்சியும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியும் புதுமுகங்களைக் களமிறக்கியுள்ளன.

ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லியாங் எங் ஹுவா(Liang Eng Hwa), மக்கள் செயல் கட்சியை அங்குப் பிரதிநிதிக்கிறார்.

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் பால் தம்பையா அங்குப் போட்டியிடுகிறார்.

வேட்புமனுத் தாக்கல் நிலையத்தில் நன்றியுரை ஆற்றிய திரு. லியாங், தாம் புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தில் வளர்ந்தவர் என்பதையும், இப்போதும் அதன் அருகிலேயே வசிப்பதையும் சுட்டினார்.

முன்னர் அதன் நாடாளுமன்ற உறுப்பினராய் இருந்த டாக்டர் தியோ ஹோ பின்னுக்கு (Teo Ho Pin) அவர் நன்றி தெரிவித்தார்.

ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதியில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் டாக்டர் தம்பையா இம்முறையும் அங்குப் போட்டியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதற்கு மாறாக அவர் இம்முறை புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதியில் களமிறங்கியுள்ளார்.

Top