Images
  • PAP Heng
    (படம்: Gaya Chandramohan/ CNA)

மக்கள் செயல் கட்சி கடினமான உண்மைகளை மறைப்பதில்லை: துணைப் பிரதமர் ஹெங்


துணைப் பிரதமரும், மக்கள் செயல் கட்சியின் முதலாம் உதவித் தலைமைச் செயலாளருமான திரு. ஹெங் சுவீ கியெட்,
கட்சி கடினமான உண்மைகளை மறைப்பதில்லை என்றும், உயர்தர நம்பிக்கை, நேர்மையைக் கடைப்பிடிப்பதாகவும் கூறியிருக்கிறார்.

மக்கள் செயல் கட்சியின் 65 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் அவர் உரையாற்றினார்.

ஈராண்டுக்கு முன்னர் பொருள், சேவை வரி உயர்வு பற்றித் தாம் அறிவித்ததை அவர் சுட்டினார்.

அப்போது அந்தச் செய்தி மகிழ்ச்சிகரமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றார் திரு. ஹெங்.

சிலர் தம்மிடம் அதுகுறித்து அதிகம் பேசவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதை அவர் நினைவுகூர்ந்தார்.

ஆனால் தாம் அதுபற்றிய விவரங்களை எடுத்துரைக்காவிட்டால், நிச்சயம் எதிர்க்கட்சிகள் வினா எழுப்பும்; ஆகவே முன்கூட்டியே விளக்கமளிப்பது தமது பொறுப்பு என்று திரு. ஹெங் கூறினார்.

கொண்டாட்டத்தையொட்டி இடம்பெறும் வருடாந்தர மாநட்டில் கட்சி உறுப்பினர்கள், ஆர்வலர்கள் என்று பலர் கலந்து கொள்கிறார்கள்.

அவர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக 400க்கும் மேற்பட்டபவர்களுக்கு விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன.

மக்கள் செயல் கட்சியின் தலைமைச் செயலாளரான பிரதமர் லீ சியென் லூங்கும் (Lee Hsien Loong) இன்று உரையாற்றவிருக்கிறார்.
 

Top