Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மக்கள் செயல் கட்சி புதிய தலைமுறை வாக்காளர்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப நடந்துகொள்ளவேண்டும்: பிரதமர் லீ

மக்கள் செயல் கட்சி புதிய தலைமுறை வாக்காளர்காளின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப நடந்துகொள்ளவேண்டும் என்று பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
மக்கள் செயல் கட்சி புதிய தலைமுறை வாக்காளர்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப நடந்துகொள்ளவேண்டும்: பிரதமர் லீ

(படம்: TODAY/Raj Nadarajan)

மக்கள் செயல் கட்சி புதிய தலைமுறை வாக்காளர்காளின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப நடந்துகொள்ளவேண்டும் என்று பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.

மக்கள் செயல் கட்சியின் மாநாட்டில் பேசியபோது அவர் அவ்வாறு் கூறினார்.

நடப்பிலுள்ள யோசனைகள் குறித்த மறுஆய்வு, மேலும் அதிகமான விவாதங்கள், போட்டித்தன்மை ஆகியவை புதிய வாக்காளர்களின் எதிர்பார்ப்புகளில் சில எனத் திரு. லீ சுட்டினார்.

கட்சி எதிர்மாறான கருத்துகளைக் கண்டு அஞ்சவில்லை, பயனுள்ள கலந்துரையாடல்களை வரவேற்கிறது என்பதை மக்கள் செயல் காட்சி சிங்கப்பூரர்களுக்குக் காட்டவேண்டும் என்று அவர் கூறினார்.

நாம் நல்ல யோசனைகளை எல்லாத் தரப்பினரிடமிருந்தும் வரவேற்கிறோம்..

சிங்கப்பூரர்களின் அக்கறைக்குரிய அம்சங்களையும் கருத்துகளையும் கவனமாகக் கேட்கிறோம்,

என்று திரு. லீ சொன்னார்.

எனவேதான் சிங்கப்பூர்ப் பெண்களின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல்களை அரசாங்கம் தொடங்கியுள்ளதை அவர் சுட்டினார்.

பொது மருத்துவமனைகளில் முஸ்லிம் தாதியர் முக்காடு அணிய அண்மையில் அனுமதி வழங்கப்பட்டதாகத் திரு. லீ குறிப்பிட்டார்.

இருப்பினும் அரசியல் கலந்துரையாடல் என்பது நல்ல யோசனைகளை ஏற்றுக்கொள்வதிலும் எடுத்துச்சொல்வதிலும் மட்டுமே இல்லை...'தவறான கண்ணோட்டங்களை எதிர்கொள்வதில்' உள்ளது என்று அவர் கூறினார்.

தனிப்பட்ட காரணங்களுக்காகவும் அரசியல் நோக்கத்துக்காகவும், பிரச்சினைகளைப் பயன்படுத்தி மக்களைக் குழப்பி, அவர்களின் மகிழ்ச்சியைப் பாதிக்கும் வகையில் நடந்துகொள்வோரை வெளியுலகுக்குக் காட்டவேண்டும்,

என்று திரு. லீ தெரிவித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்