Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மக்கள் செயல் கட்சி 4 புதிய உத்தேச வேட்பாளர்களை அறிமுகம் செய்துள்ளது

மக்கள் செயல் கட்சி, எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் நால்வரை அறிமுகம் செய்துள்ளது.

வாசிப்புநேரம் -
மக்கள் செயல் கட்சி 4 புதிய உத்தேச வேட்பாளர்களை அறிமுகம் செய்துள்ளது

(படம்: மக்கள் செயல் கட்சி)

மக்கள் செயல் கட்சி, எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் நால்வரை அறிமுகம் செய்துள்ளது.

துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட், அவர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

டெஸ்மண்ட் டான் கொக் மிங் (Desmond Tan Kok Ming), எட்வர்ட் சியா பிங் ஹுய் (Edward Chia Bing Hui), நாடியா அஹ்மது சம்டின் (Nadia Ahmad Samdin), ஐவன் லிம் ஷாவ் சுவான் (Ivan Lim Shaw Chuan) ஆகியோர் அவர்களில் அடங்குவர்.

டெஸ்மண்ட் டான் (50 வயது)

  • 28 ஆண்டுகள் சிங்கப்பூர் ஆயுதப் படையில் சேவையாற்றியவர்.

எட்வர்ட் சியா (36 வயது)

  • தொழிலதிபர் , Timbre Group குழுமத்தின் இணை நிறுவனரும் நிர்வாக இயக்குநர்
  • சிறிய நடுத்தர நிறுவனங்கள் பற்றி எடுத்துரைக்க விரும்புவதாக அவர் கூறினார்

நாடியா (30 வயது)

  • TSMP சட்ட நிறுவனத்தின் இணை இயக்குநராகப் பணியாற்றுகிறார்
  • இளையர்களுக்கும் மூத்தோருக்கும் 15 ஆண்டுகளாக அவர் சேவையாற்றி வருகிறார்

ஐவன் லிம் (42 வயது)

  • கெப்பல் கடல் துறை நிறுவனத்தில் பொது மேலாளாராகப் பணியாற்றிவருகிறார்.
  • 'O' நிலைத் தேர்வுகளை முடித்து நிறுவனத்தில் சேர்ந்த அவர், பணியில் இருந்தபோதே பட்டக்கல்வி பெற்றுத் தொழில் வாழ்க்கையில் முன்னேறினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்