Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வழக்குரைஞர், வங்கியாளர் உட்பட மக்கள் செயல் கட்சி அறிமுகம் செய்திருக்கும் மேலும் 4 புதிய உத்தேச வேட்பாளர்கள்

மக்கள் செயல் கட்சியின் சார்பில் போட்டியிடவிருக்கும் புதியவர்களை சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, அறிமுகம் செய்துவைத்தார்.

வாசிப்புநேரம் -
வழக்குரைஞர், வங்கியாளர் உட்பட மக்கள் செயல் கட்சி அறிமுகம் செய்திருக்கும் மேலும் 4 புதிய உத்தேச வேட்பாளர்கள்

படம்: People's Action Party

மக்கள் செயல் கட்சியின் சார்பில் போட்டியிடவிருக்கும் புதியவர்களை சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, அறிமுகம் செய்துவைத்தார்.

ஹேனி சோ ஹுய் பின் (Hany Soh Hui Bin), டோன் வீ பூன் ஹொங் (Don Wee Boon Hong), முகமது ஃபாமி பின் அலிமான் (Mohd Fahmi Aliman), யிப் ஹொன் மெங் (Yip Hon Weng) ஆகிய நால்வரையும் திரு. மசகோஸ் அறிமுகம் செய்து வைத்தார்.

ஹேனி சோ ஹுய் பின் (33 வயது)   

  • MSC சட்ட நிறுவனத்தில் இயக்குநராக இருக்கிறார்.
  • சமூகத்தில் சட்டம் பற்றிய புரிந்துணர்வைத் தொடர்ந்து எடுத்துரைக்க அவர் விரும்புவதாகத் தெரிவித்தார்.
  • சட்ட உதவி தேவைப்பட்டால் யாரை, எப்படி நாடலாம் என்பது பற்றி குடியிருப்பாளர்களிடம் விழிப்புணர்வை அதிகரிக்க விரும்புவதாக அவர் சொன்னார்.

டோன் வீ பூன் ஹொங் (43 வயது) 

  • உள்ளூர் வங்கியில் சேவையாற்றுகிறார்.
  • இன்னும் விரிவான முறையில் சிங்கப்பூரர்களுக்கு உதவும் நோக்கில் அரசியலில் சேர்ந்ததாக அவர் சொன்னார்.
  • வசதி குறைந்த மாணவர்கள், மனநல நோயாளிகள், உள்ளூர் நிறுவனங்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்துத் தாம் அக்கறை கொண்டிருப்பதாகவும் திரு டோன் சொன்னார்.


முகமது ஃபாமி (48 வயது)

  • தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் நிர்வாக, ஆய்வுப் பிரிவின் இயக்குநராக இருக்கிறார்.
  • ஆரோக்கியம், மூத்தோரிடையே மனநலச் சுகாதாரம் ஆகியவை குறித்தும், மறு திறன், மேம்பட்ட பயிற்சி ஆகியவற்றிலும் அக்கறை கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.
  • காலத்துக்கேற்ற திறன்களை வளர்த்துக்கொள்வதன் முக்கியத்துவத்தை அதிகரிக்கவும அவர் விருப்பம் தெரிவித்தார்.

யிப் ஹொன் வெங் (43 வயது)

  • முன்னைய அரசாங்க ஊழியர் ஆவார்.
  • உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகத் தமது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார்.
  • பின்னர், கல்வி, மனிதவளம், தற்காப்பு ஆகிய அமைச்சுகளில் கொள்கை, நிர்வாகம் ஆகியவற்றில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர்.
  • அரசாங்கத்திற்கும் சமூகத்திற்கும் இடையே மூத்தோர் பராமரிப்பின் தொடர்பில் ஒருங்கிணைப்பை மேம்படுத்த விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்