Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கார்நிறுத்த விதிமுறைகளை மீறுவோருக்கு அடுத்த மாதம் முதல் கூடுதல் அபராதம்

கார்நிறுத்த விதிமுறைகளை மீறுவோருக்கு அடுத்த மாதத்திலிருந்து கூடுதல் அபராதம் விதிக்கப்படும்.

வாசிப்புநேரம் -

கார்நிறுத்த விதிமுறைகளை மீறுவோருக்கு அடுத்த மாதத்திலிருந்து கூடுதல் அபராதம் விதிக்கப்படும்.

அத்தகைய விதிமீறல்களைப் புரிவதிலிருந்து ஓட்டுநர்களைத் தடுக்கும் நோக்கில் அபராதங்கள் விதிக்கப்படுவதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் நகரச் சீரமைப்பு ஆணையமும் தெரிவித்துள்ளன.

விதிமுறைகளுக்கு உட்பட்டு நடந்துகொள்வோருக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று அந்த அமைப்புகள் கூறின.

கடைசியாக 1991இல் கார்நிறுத்த விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டன.

சட்டவிரோதமாக வாகனங்களை நிறுத்தும் மோட்டார்சைக்கிள் ஓட்டுநர்களுக்கு 35 வெள்ளி அபராதமும் , கார் ஓட்டுநர்களுக்கு 70 வெள்ளி அபராதமும், கனரக வாகன ஓட்டுநர்களுக்கு 100 வெள்ளி அபராதமும் விதிக்கபப்டும்.

தற்போது அந்த அபராதங்கள் முறையே 25 வெள்ளி, 50 வெள்ளி, 80 வெள்ளி என உள்ளன.

கூப்பன்களை வைக்கவோ மின்னிலக்க ரீதியாகக் கட்டணம் செலுத்தவோ தவறுவோருக்கும் அபராதத் தொகை உயர்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்