Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தடுப்பூசி நிலையத்தில் சம்பளம் வழங்கப்படாதவர்களுக்கு நல்லெண்ண அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்

புக்கிட் தீமா சமூக மன்றத்தில் செயல்படும் தடுப்பூசி நிலையத்தில் தடுப்பூசி போடுபவர்கள், தாதியர் சிலருக்கு துணைக் குத்தகையாளரிடமிருந்து சம்பளம் வழங்கப்படவில்லை.

வாசிப்புநேரம் -

புக்கிட் தீமா சமூக மன்றத்தில் செயல்படும் தடுப்பூசி நிலையத்தில் தடுப்பூசி போடுபவர்கள், தாதியர் சிலருக்கு துணைக் குத்தகையாளரிடமிருந்து சம்பளம் வழங்கப்படவில்லை.

பாதிக்கப்பட்ட 15 பேருக்கு நல்லெண்ண அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் என்று Parkway Shenton சுகாதாரப் பராமரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு மாதச் சம்பளம் வழங்கப்படவில்லை என்று தடுப்பூசி நிலைய ஊழியர்கள் சிலர் புகார் அளித்ததாக ஜூலை மாதம் TODAY-இல் தகவல் வெளிவந்தது.

மனிதவள அமைச்சும் பூசல் தீர்க்கும் நிர்வாகத்துக்கான முத்தரப்புக் கூட்டணியும் இரண்டு நிறுவனங்களிடம் விசாரணை நடத்துவதாக கூறியிருந்தன.

Megamanpower, Singapore Ambulance Association ஆகிய நிறுவனங்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

புக்கிட் தீமா சமூக மன்றத்தில் செயல்படும் தடுப்பூசி நிலையத்தைச் சேர்ந்த 15 பேர் புகார் அளித்ததாகத் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் (Ng Chee Meng), Facebook பதிவில் குறிப்பிட்டார்.

Parkway Shenton, அதன் துணைக் குத்தகையாளருக்கு ஏற்கெனவே கட்டணம் செலுத்திவிட்டதாக அவர் சொன்னார்.

துணைக் குத்தகையாளர்களின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ், மனிதவள அமைச்சு, Parkway Shenton ஆகியவை ஊழியர்களுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளதாகவும் திரு. இங் சொன்னார்.


- CNA/dv(gr)
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்