Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சாங்கியில் ஆளில்லா வானூர்தி அத்துமீறல்-மூவாண்டுகளில் 8 புகார்கள்

சாங்கி விமான நிலையத்தின் அருகே, கடந்த மூவாண்டுகளில் சட்டவிரோத ஆளில்லா வானூர்தி இயக்கங்கள் குறித்து 8 புகார்கள் பதிவாகியுள்ளன.  போக்குவரத்துக்கான மூத்த துணையமைச்சர் லாம் பின் மின் இன்று (ஜனவரி 14) நாடாளுமன்றத்தில் அதைத் தெரிவித்தார். 

வாசிப்புநேரம் -
சாங்கியில் ஆளில்லா வானூர்தி அத்துமீறல்-மூவாண்டுகளில் 8 புகார்கள்

(படம்: AFP/Tobias Schwarz)

சாங்கி விமான நிலையத்தின் அருகே, கடந்த மூவாண்டுகளில் சட்டவிரோத ஆளில்லா வானூர்தி இயக்கங்கள் குறித்து 8 புகார்கள் பதிவாகியுள்ளன. போக்குவரத்துக்கான மூத்த துணையமைச்சர் லாம் பின் மின் இன்று (ஜனவரி 14) நாடாளுமன்றத்தில் அதைத் தெரிவித்தார்.

இருப்பினும், அவை எதுவுமே சாங்கி விமான நிலைய வட்டாரத்திற்குள் நுழையவில்லை என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

சிங்கப்பூரில் ஆளில்லா வானூர்திகளை விமான நிலையத்தைச் சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இயக்கக்கூடாது, அது சட்டவிரோதமானது.

ஆளில்லா வானூர்திகளின் இயக்கம் சாங்கி விமான நிலையச் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு டாக்டர் லாம் பதிலளித்தார்.

சிங்கப்பூரின் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், சாங்கி விமான நிலையத்தைச் சுற்றி தினமும் தீவிரக் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

சென்ற மாதம் பிரிட்டனில் சட்டவிரோதமாகப் பறக்கவிடப்பட்ட ஆளில்லா வானூர்திகளால், 3 நாட்களுக்கு விமான நிலைய நடவடிக்கைகள் முடங்கிப்போயின.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்