Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சென்ற ஆண்டு 2,400க்கும் அதிகமான உணவுச் சோதனை நடவடிக்கைகள்: அமைச்சர் ஏமி கோர்

உணவு தயாரித்து விநியோகிக்கும் நிறுவனங்கள் மீது சென்ற ஆண்டு 2,400க்கும் அதிகமான முறை சோதனை  மேற்கொள்ளப்பட்டதாகச் சுற்றுப்புற, நீர்வள, சுகாதாரத் துறைகளுக்கான மூத்த துணையமைச்சர் டாக்டர் ஏமி கோர் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -

சென்ற ஆண்டு நடந்த நச்சுணவுச் சம்பவங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

அன்றாடம் நடத்தப்படும் சோதனைகளைத் தாண்டி, சென்ற மாதம் முதல், 900 கூடுதல் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

தேசியச் சுற்றுப்புற அமைப்பும் வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையமும் உணவுத் தயாரிப்பு நிறுவனங்களைக் கண்காணிக்கக் கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதை டாக்டர் கோர் உறுதிப்படுத்தினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்