Images
  • singpost (1)

பொட்டலங்கள், பதிவு அஞ்சல்களை உரியவரிடம் சேர்ப்பதற்குப் புதிய தரநிலைகளை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசனை

பொட்டலங்கள், பதிவு அஞ்சல்கள் ஆகியவற்றை உரியவரிடம் சேர்ப்பதில் புதிய தரநிலைகளை அறிமுகப்படுத்துவது குறித்து தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் ஆலோசித்துவருகிறது.

தொடர்பு, தகவல் மூத்த துணையமைச்சர் சிம் ஆன் அது பற்றி நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

2017ஆம் ஆண்டு, உள்ளூர் தபால்களை உரியவரிடம் நேரத்திற்குக் கொண்டு சேர்க்காததற்கு சிங்போஸ்ட்டுக்குச் சென்ற வாரம் 100,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அறிவிப்பு வந்துள்ளது.

தவறானோரிடம் கொண்டு சேர்க்கப்பட்ட தபால்கள், காணாமற்போன தபால்கள் ஆகியவற்றின் தொடர்பில் சிங்போஸ்ட்டுக்குச் சென்ற ஆண்டு 91 புகார்கள் வந்திருக்கின்றன.

பெறுநர் வீட்டில் இருந்தும் தபாலைப் பெற வீட்டில் ஆளில்லை என்ற குறிப்பு தங்களுக்கு வந்தததாக ஆணையத்திடம் 8 பேர் புகார் கொடுத்தனர்.

2017இல் அத்தகைய 7 புகார்கள் எழுந்தன.

அத்தகைய மேலும் சில சம்பவங்கள் நடந்திருக்கலாம்.

ஆனால் அவை பற்றி முறையாகப் புகார் பதிவு செய்யப்படாமல் இருந்திருக்கலாம் என்று சிம் ஆன் குறிப்பிட்டார்.

எனவே, வழிமுறைகளைச் சீராக்க ஆணையம் சில நடவடிக்கைகளை எடுக்கும் என்று எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.

கூடுதல் ஊழியர்களை நியமிப்பது, ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவது போன்றவற்றின் வாயிலாகச் சேவைத் தரத்தை மேம்படுத்தப்போவதாக சிங்போஸ்ட் அறிவித்தது. 

Top