Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொதுத்தேர்தல் 2020: போட்டியிடவுள்ள கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்...ஒரு பார்வை

சிங்கப்பூரில் நாளை பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தினம். போட்டியிடத் தயாராகி வரும் கட்சிகள் சில அவற்றின் தேர்தல் அறிக்கைகளைக் கடந்த சில நாள்களாக வெளியிட்டு வருகின்றன. இதுவரை வெளியிடப்பட்ட அறிக்கைகள்..ஒரு பார்வையில்.

வாசிப்புநேரம் -
பொதுத்தேர்தல் 2020: போட்டியிடவுள்ள கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்...ஒரு பார்வை

(படங்கள்: CNA, The Workers' Party, People's Action Party)

சிங்கப்பூரில் நாளை பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தினம். போட்டியிடத் தயாராகி வரும் கட்சிகள் சில அவற்றின் தேர்தல் அறிக்கைகளைக் கடந்த சில நாள்களாக வெளியிட்டு வருகின்றன. இதுவரை வெளியிடப்பட்ட அறிக்கைகள்..ஒரு பார்வையில்.

மக்கள் செயல் கட்சி:
 "நம் வாழ்க்கை, நம் வேலைகள், நம் எதிர்காலம்" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு அறிக்கை அமைக்கப்பட்டுள்ளது.சுகாதாரப் பராமரிப்பு, வர்த்தகம், உள்கட்டமைப்புக்குப் புத்துயிர் அளித்தல் ஆகிய அம்சங்களில் அது கவனம் செலுத்துகிறது.
பட்டாளிக் கட்சி:

"உங்கள் வாக்கை அர்த்தமுள்ளதாக்குங்கள்" என்ற முழக்கவரியுடன், COVID-19 நோய்ப்பரவலை எவ்வாறு கையாள்வது, நெருக்கடியான காலக்கட்டத்துக்குப் பிறகு எவ்வாறு முன்னேற்றம் காண்பது போன்ற அம்சங்களை அறிக்கை குறிப்பிட்டது.
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி:

"நீங்கள் மேம்பட்டதைப் பெறத் தகுதியுள்ளவர்" என்ற முழக்கவரியுடன் சிங்கப்பூர் அடைந்துள்ள பொருளியல் வளர்ச்சியின் பலன்களை, சிங்கப்பூரர்கள் அனுபவிப்பதை உறுதிசெய்வதை முக்கிய இலக்காகக் கொண்டுள்ளது அறிக்கை.

சீர்திருத்தக் கட்சி:

மேலும் நியாயமான சிங்கப்பூரை மீண்டும் உருவாக்குவோம் என்ற கருப்பொருளுடன் சீர்திருத்தக் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி:

லாபமீட்டுவதை விட மக்கள் மீது அதிகக் கவனம் செலுத்துதல், செழிப்பைக் காட்டிலும் உரிமைகளுக்கு முன்னுரிமை, செல்வத்தை விடவும் பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் என்ற கோட்பாடுகளின் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டதாகக் கட்சி தெரிவித்தது.
ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சி:

அரசாங்க நடைமுறைகளிலும் பொது நிதியைப் பயன்படுத்துவதன் தொடர்பிலும் கூடுதல் வெளிப்படைத்தன்மை தேவை என்று கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டபோது தெரிவித்தது.
சிங்கப்பூர் மக்கள் கட்சி: 

'நாளை நமதே' என்ற கருப்பொருளில் அமைந்துள்ள அதன் அறிக்கை பொறுப்புணர்வு, கடப்பாடு, புரிந்துணர்வு ஆகிய 3 கோட்பாடுகளின் அடிப்படையில் வரையப்பட்டதாகக் கட்சி சொன்னது.



 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்