Images
  • pasir panjang
    (படம்: NParks)

பாசிர் பாஞ்சாங் வட்டாரத்தின் வரலாற்றையும் இயற்கைச் சூழலையும் வெளிப்படுத்தும் பூங்கா- சமூகத்தின் கைவண்ணத்தில்

பாசிர் பாஞ்சாங் (Pasir Panjang) வட்டாரத்தின் வரலாற்றையும் இயற்கைச் சூழலையும் வெளிப்படுத்தும் வகையில் அதன் சமூகத்தினர் பூங்கா ஒன்றை வடிவமைத்துள்ளனர்.

இயற்கை, கடல்துறை வரலாறு, சமூக மேம்பாடு போன்றவற்றில் கவனம் செலுத்தும் வகையிலான முதல் பூங்காவை வடிவமைப்பதில் பாசிர் பாஞ்சாங் வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 170 தனிநபர்களும் அமைப்பினரும் பங்காற்றினர். 

தேசியப் பூங்காக் கழகத்தின் Friends of the Parks முயற்சியின் கீழ், அந்தப் பூங்காவைச் சமூகத்தினர் தொடர்ந்து மேம்படுத்துவர்.

Top