Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பாசிர் பாஞ்சாங் முனையத்தில் கோவிட்-19 பரிசோதனை - 2,750 ஊழியர்களுக்குக் கிருமித்தொற்று இல்லை

பாசிர் பஞ்சாங் முனையத்தில் கிருமித்தொற்றுப் பரிசோதனை - 2,750 ஊழியர்களுக்கு நோய்த்தொற்று இல்லை

வாசிப்புநேரம் -

பாசிர் பாஞ்சாங் முனையத்தில் நடத்தப்பட்ட கிருமித்தொற்றுப் பரிசோதனையில், 2,750 ஊழியர்களுக்குக் கிருமித்தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் அங்கு 4 பேருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டிருக்கிறது.

அதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கையாகப் பரிசோதனை நடவடிக்கை கடந்த வியாழக்கிழமை தொடங்கியது.

பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் முன்னிலை ஊழியர்களுக்கு, இரண்டு வாரத்துக்கு ஒருமுறை தற்போது பரிசோதனை நடத்தப்படுகிறது.

இனி, அவர்களுக்கு வாரத்துக்கு ஒருமுறை பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும், போட்டுக்கொள்ளாதவர்களுக்கும் அது பொருந்தும்.

முனையங்களில், ஊழியர்களுக்கு இடையே தொடர்பைக் கட்டுப்படுத்த, அவர்கள் வெவ்வேறு குழுக்களாகப் பிரிக்கப்படுவர்.

இதுவரை, துறைமுக ஊழியர்களில் 4,000 பேருக்குக் கிருமித்தொற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்