Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பாசிர் பாஞ்சாங் மொத்த விற்பனை நிலைய ஊழியர்கள் அனைவருக்கும் கிருமித்தொற்றுப் பரிசோதனை

 பாசிர் பாஞ்சாங் மொத்த விற்பனை நிலைய ஊழியர்கள் அனைவருக்கும் கிருமித்தொற்றுப் பரிசோதனை

வாசிப்புநேரம் -
பாசிர் பாஞ்சாங் மொத்த விற்பனை நிலைய ஊழியர்கள் அனைவருக்கும் கிருமித்தொற்றுப் பரிசோதனை

படம்: CNA

பாசிர் பாஞ்சாங் மொத்த விற்பனை நிலைய ஊழியர்கள் அனைவருக்கும் முன்னெச்சரிக்கையாக கிருமித்தொற்றுப் பரிசோதனை நடத்தப்படுகிறது.

குறிப்பிட்ட கால இடைவெளியில், அங்கு வழக்கமாகப் பரிசோதனை நடத்துவதற்கான வழிகள் குறித்தும் சிங்கப்பூர் உணவு அமைப்பு ஆராய்ந்து வருகிறது.

மொத்த விற்பனை நிலைய ஊழியர்களுக்கு நேற்று மாலை கட்டாயக் கிருமித்தொற்றுப் பரிசோதனை தொடங்கியது. அது நிறைவடைய மூன்று நாளாகும்.

ஊழியர்கள் எந்த நேரத்தில் பரிசோதனைக்குச் செல்ல வேண்டும் என்பது பற்றி அவர்களுக்குக் குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது; வியாபாரம் மந்தமாகவே நடக்கிறது; மொத்த விற்பனை நிலையம் மூடப்பட்டால் வாழ்வாதாரம் முடங்கிவிடுமோ என்று ஊழியர்கள் கவலைப்படுகின்றனர்.

SARS நோய்ப்பரவலின் போது மொத்த விற்பனை நிலையம் ஒரு மாதத்துக்கு மேல் மூடப்பட்டது. அதுபோன்ற நிலை மீண்டும் ஏற்படாது என்று வர்த்தகர்கள் சங்கம் நம்பிக்கையுடன் காத்திருக்கிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்