Images
  • pp
    (படம்: Urban Redevelopment Authority)

பாசிர் பாஞ்சாங்கில் பண்ணைகள், கேளிக்கைப் பூங்காக்கள் ஆகியவற்றைக் கட்டப் பரிந்துரை

பண்ணைகள்... கேளிக்கைப் பூங்காக்கள்... பழைய கப்பல் கொள்கலன்களிலிருந்து உருவாக்கப்படும் கோபுரங்கள்...பாசிர் பாஞ்சாங் வட்டாரத்தை மேம்படுத்தப் பரிந்துரைக்கப்பட்டுள்ள சில யோசனைகள் இவை.

Greater Southern Waterfront எனும் பரந்த தென் நீர்முகப்புப் பகுதியை உருமாற்ற அரசாங்கம் மேற்கொள்ளும் திட்டத்தின்கீழ் பாசிர் பாஞ்சாங் புதுப் பொலிவு பெறவுள்ளது.

வரும் 15 முதல் 20 ஆண்டுகளில், தாங்கள் காண விரும்பும் மாற்றங்களைப் பொதுமக்கள் பரிந்துரைத்துள்ளனர்.

'Power-Up Pasir Panjang' போட்டியில் பரிந்துரைக்கப்பட்ட திட்டங்கள் கண்காட்சியில் இன்று காட்சிக்கு வைக்கப்பட்டன.

போட்டியில் மொத்தம் 79 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

நகரச் சீரமைப்பு ஆணையமும் சிங்கப்பூர் நில ஆணையமும் இணைந்து அவற்றிலிருந்து 10 பரிந்துரைகள் தெரிவு செய்யப்பட்டன.  

Top