Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பாசிர் ரிஸ்-பொங்கோல் குடியிருப்பாளர்களின் வேலைகளைப் பாதுகாக்க கூடுதல் ஆதரவு

பாசிர் ரிஸ்-பொங்கோல் (Pasir Ris-Punggol) அடித்தள அமைப்புகள் குடியிருப்பாளர்களின் வேலைகளைப் பாதுகாப்பதற்குக் கூடுதல் ஆதரவை வழங்கி வருகின்றன.

வாசிப்புநேரம் -
பாசிர் ரிஸ்-பொங்கோல் குடியிருப்பாளர்களின் வேலைகளைப் பாதுகாக்க கூடுதல் ஆதரவு

(படம்: Facebook/Pasir Ris Elias Community Club)

பாசிர் ரிஸ்-பொங்கோல் (Pasir Ris-Punggol) அடித்தள அமைப்புகள் குடியிருப்பாளர்களின் வேலைகளைப் பாதுகாப்பதற்குக் கூடுதல் ஆதரவை வழங்கி வருகின்றன.

பொருத்தமான வேலைகளைக் கண்டறிதல், நேர்முகத் தேர்வுக்குத் தயார் செய்தல் போன்ற சேவைகளைக் குடியிருப்பாளர்கள் தங்கள் சமூக மன்றத்திலேயே பெறலாம்.

பாசிர் ரிஸ் இலியாஸ் (Pasir Ris Elias) சமூக மன்றத்தில் திறக்கப்பட்டிருக்கும் புதிய Nexus நிலையத்தில் குடியிருப்பாளர்கள் இனி உதவி நாடலாம்.

பொருளியல் நலிவுக்கிடையே வேலை தேடுவோருக்கு உதவ, வேலை ஆதரவுப் பணிக்குழு மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதி அது.

வேலைச் சந்தைகளிலும் குடியிருப்பாளர்கள் கலந்துகொள்ளலாம்.

நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் ஆகியோரிடையே புதிய திறன்கள் குறித்தும் வளரும் துறைகளின் வேலைகள் குறித்தும் எடுத்துரைக்கப்படும்.

வேலை தேடும் அனைத்துத் தரப்பினரையும் கருத்தில்கொண்டு திட்டம் செயல்படுத்தப்படுவதாய் பாசிர் ரிஸ் சென்ட்ரல் (Pasir Ris Central) அடித்தள அமைப்புகளுக்கான ஆலோசகர் திரு. டெஸ்மண்ட் டான் (Desmond Tan) கூறினார்.

குடியிருப்பாளர்கள் தங்கள் வேலையில் நீடித்திருக்கத் திட்டம் உதவும் என்றார் அவர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்