Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தந்தையருக்கான மகப்பேற்று விடுப்பு - ஓராண்டுக்குள் பயன்படுத்தவேண்டுமென்ற விதிமுறையில் மாற்றமில்லை

சிங்கப்பூரில் அரசாங்க வேலைகளில் உள்ள 84 விழுக்காட்டுத் தந்தையர்  அவர்களுக்கான மகப்பேற்று விடுப்பைப் பயன்படுத்திக்கொள்கின்றனர். ஒப்புநோக்க ஒட்டுமொத்தத் தந்தையரில் அது, 53 விழுக்காடு.

வாசிப்புநேரம் -
தந்தையருக்கான மகப்பேற்று விடுப்பு - ஓராண்டுக்குள் பயன்படுத்தவேண்டுமென்ற விதிமுறையில் மாற்றமில்லை

கோப்புப் படம்: AFP/Roslan Rahman

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

சிங்கப்பூரில் அரசாங்க வேலைகளில் உள்ள 84 விழுக்காட்டுத் தந்தையர் அவர்களுக்கான மகப்பேற்று விடுப்பைப் பயன்படுத்திக்கொள்கின்றனர். ஒப்புநோக்க ஒட்டுமொத்தத் தந்தையரில் அது, 53 விழுக்காடு.

மனிதவள அமைச்சர் ஜோசஃபின் தியோ (Josephine Teo), நாடாளுமன்றத்தில் அதனைத் தெரிவித்தார்.

டென்மார்க் போன்ற நாடுகள் குடும்ப ஆதரவுக் கொள்கைகளுக்குப் பிரபலமானவை.

அங்கெல்லாம் தந்தையர் அந்த விடுப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் விகிதம் 70 விழுக்காடு.

சிங்கப்பூர் அரசாங்கத் துறையிலிருப்போர் அதைவிடவும் கூடுதலாகப் பயன்பெறுவதை அமைச்சர் சுட்டினார்.

பிள்ளை வளர்ப்பில் அக்கறை செலுத்தும் தந்தையரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக திருமதி தியோ கூறினார்.

முதலாளிகள் அதற்குக் கூடுதல் ஆதரவு தரவேண்டும் என்றார் அவர்.

சிங்கப்பூரில் தந்தையர் மகப்பேறு தொடர்பில் 8 வாரம் வரை விடுப்புக்குத் தகுதிபெறுவர்.

பிள்ளை பிறந்த ஓராண்டுக்குள் அதனைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

அதில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்