Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வர்த்தகங்கள், அமைப்புகள் உடனடிப் பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ள PayNow Corporate சேவை

வர்த்தக நிறுவனங்களுக்கான PayNow Corporate சேவை அறிமுகம் கண்டதையடுத்து, சிங்கப்பூரில் செயல்படும் வர்த்தகங்களும், பெரிய அளவிலான அமைப்புகளும், உடனடிப் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது சாத்தியமாகியுள்ளது.

வாசிப்புநேரம் -
வர்த்தகங்கள், அமைப்புகள் உடனடிப் பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ள PayNow Corporate சேவை

(படம்: CNA)


வர்த்தக நிறுவனங்களுக்கான PayNow Corporate சேவை அறிமுகம் கண்டதையடுத்து, சிங்கப்பூரில் செயல்படும் வர்த்தகங்களும், பெரிய அளவிலான அமைப்புகளும், உடனடிப் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது சாத்தியமாகியுள்ளது.

யாருக்குப் பணம் செலுத்தப்படவேண்டுமோ அவரது கைத்தொலைபேசி எண் அல்லது அடையாள அட்டை எண்ணை மட்டும் கொண்டு தனிநபர்கள் பணப் பரிவர்த்தனை செய்ய வகைசெய்தது PayNow சேவை. தற்போது அது வர்த்தகங்களுக்கும் விரிவாக்கம் கண்டுள்ளது.

நிறுவனங்கள் அவற்றின் வங்கிக் கணக்குகளுடன் Unique Entity Numbers எனப்படும் தனிப்பட்ட அடையாள எண்களை இணைத்தால் போதும்.

காசோலைகளின் வழி பணத்தைப் பெறுவதற்காகக் காத்திருக்கத் தேவையில்லை.

DBS, HSBC, Citibank உள்ளிட்ட 9 வங்கிகள் அந்தச் சேவையை வழங்குகின்றன.

PayNow சேவை, மின்னிலக்கக் கட்டணங்களுக்கான ஆக அதிகமான வங்கி வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் என்று நம்பப்படுகிறது.

வர்த்தக நிறுவனங்களுக்கு இந்த ஆண்டின் பிற்பகுதியில் QR குறியீடுகளும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்