Images
  • PCF Closed
    (படம்: Jeremy Long/ CNA)

PCF ஊழியர்கள் சிலருக்கு COVID-19 கிருமித்தொற்று - அனைத்து நிலையங்களும் 4 நாள்கள் மூடப்படும்

சிங்கப்பூரில் உள்ள அனைத்து PCF நிலையங்களும் இன்றிலிருந்து அடுத்த 4 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

PCF Sparkletots நிலையத்தில் பணிப்புரியும் ஊழியர்கள் COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களில் ஆசிரியர்கள் உட்பட நிலையத்தின் முதல்வரும் அடங்குவர்.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களிடம் கிருமித்தொற்றுக்கான அறிகுறி கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து தென்படத் தொடங்கியது என ECDA அமைப்பு தெரிவித்தது.

எனவே, ஹெங்ஷான் (Fengshan) வட்டாரத்தின் புளோக் 126இல் உள்ள PCF நிலையம் அடுத்த இரண்டு வாரங்களுக்கு மூடப்படுகிறது.

இம்மாதம் 16ஆம் தேதியிலிருந்து 24ஆம் தேதி வரை நிலையத்துக்குச் சென்ற பிள்ளைகளையும் ஊழியர்களையும் கல்வி அமைச்சு தனிமைப்படுத்தியுள்ளது. 

Top