Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்டத்தை மீறிய நிறுவனங்கள் அதிகரிப்பு

தனிநபர் தகவல் பாதுகாப்பு சட்டத்தை மீறிய நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் புதிய உச்சத்தைத் தொட்டிருப்பதாக  தகவல் பாதுகாப்புக்கான சிறப்பு நிலையம் (Data Protection Excellence Centre - DPEX) அறிவித்துள்ளது. 

வாசிப்புநேரம் -
தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்டத்தை மீறிய நிறுவனங்கள் அதிகரிப்பு

(படம்: TODAY)

தனிநபர் தகவல் பாதுகாப்பு சட்டத்தை மீறிய நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் புதிய உச்சத்தைத் தொட்டிருப்பதாக தகவல் பாதுகாப்புக்கான சிறப்பு நிலையம் (Data Protection Excellence Centre - DPEX) அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரியிலிருந்து ஆகஸ்ட் வரை 26 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது அல்லது எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதாவது கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக 23 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்டத்தை மீறியதன் தொடர்பில், இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை சுமார் 1.28 மில்லியன் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதில் SingHealth இணைய ஊடுருவல் சம்பவத்தின் தொடர்பில் விதிக்கப்பட்ட அபராதம் மட்டும் ஒரு மில்லியன் வெள்ளி.

கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட அபராதத் தொகை 141,500 வெள்ளி.

2016க்கும் இந்த ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சட்டத்தை மீறிய நிறுவனங்களின் எண்ணிக்கை 90. தனிநபர் தகவலைப் பாதுகாப்பதற்கு உரிய முயற்சி எடுக்கத் தவறியதன் தொடர்பில் அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அல்லது அவை எச்சரிக்கப்பட்டன.

நிறுவனங்கள் பொதுவாக, கவனக்குறைவாலும் ஊழியர் இழைத்த தவறாலும் தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்டத்தை மீறுவதாகத் தெரியவந்துள்ளது.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்