Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தனிநபர் தகவல் குறித்த புதிய வழிகாட்டிக் குறிப்பேடு வெளியிடப்பட்டுள்ளது

தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம், நிறுவனங்களின் பொறுப்பு குறித்த புதிய வழிகாட்டிக் குறிப்பேட்டை வெளியிட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
தனிநபர் தகவல் குறித்த புதிய வழிகாட்டிக் குறிப்பேடு வெளியிடப்பட்டுள்ளது

(படம்: Jeremy Long/ CNA)


தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம், நிறுவனங்களின் பொறுப்பு குறித்த புதிய வழிகாட்டிக் குறிப்பேட்டை வெளியிட்டுள்ளது.

நிறுவனங்கள் அவற்றின் தரவுகளைப் பாதுகாக்கவும், மேம்பட்ட முறையில் நிர்வகிக்கவும் உதவும் நடவடிக்கைகளைப் பின்பற்றுவதை அந்தக் குறிப்பேடு ஊக்குவிக்கிறது.

நிறுவனத்துக்குள்ளும், அது சார்ந்த துறையிலும், அமலாக்கத்தின் கீழும் என 3 விதங்களில் தனிநபர் தகவல்களைப் பாதுகாப்பதில் நிறுவனங்களுக்குப் பொறுப்புண்டு என்று அது குறிப்பிடுகிறது.

தகுந்த எடுத்துக்காட்டுகள், பொறுப்பேற்கும் கருப்பொருள்கள் என நிறுவனங்கள் பின்பற்றக்கூடிய நடைமுறைகளையும் ஆணையம் பட்டியலிட்டுள்ளது.

தனிநபர்களிடமிருந்து தகவல்களைத் திரட்டுவது முதல் அவற்றைத் தொகுப்பிலிருந்து நீக்குவது வரையான முழு காலகட்டத்துக்கும் நிறுவனங்கள் அந்தத் தகவல்களைப் பாதுகாக்கப் பொறுப்பேற்கவேண்டும்.

நிறுவனங்கள் உரிய கண்காணிப்பு முறையைப் பின்பற்றுவதும், அவற்றின் தகவல் பாதுகாப்புக் கொள்கைகளையும், நடைமுறைகளையும் சீரான இடைவெளியில் மறுஆய்வு செய்வதும் நல்லது.

ஆணையத்தின் அமலாக்கப் பிரிவு நிறுவனங்களின் பொறுப்பு தொடர்பான கொள்கைகளை உருவாக்குகிறது. ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால் நிறுவனங்கள் அதன் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க உறுதி தரவேண்டும்; அல்லது அமலாக்கப் பிரிவின் முடிவை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்