Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பெட்ரா பிராங்கா அருகிலுள்ள சிங்கப்பூர் நீர்ப்பகுதியில் கப்பலில் தீ

சிங்கப்பூருக்குச் சொந்தமான நீர்ப்பகுதியில் தீப்பிடித்த கப்பலில் இருந்தவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு விட்டனர்.

வாசிப்புநேரம் -
பெட்ரா பிராங்கா அருகிலுள்ள சிங்கப்பூர் நீர்ப்பகுதியில் கப்பலில் தீ

(படம்: MPA)

சிங்கப்பூருக்குச் சொந்தமான நீர்ப்பகுதியில் தீப்பிடித்த கப்பலில் இருந்தவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு விட்டனர்.

பனாமாவைச் சேர்ந்த HOYU எனும் அந்தக் கப்பல், நேற்று பெட்ரா பிராங்காவுக்கு வடகிழக்கே சுமார் 18 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தபோது தீப்பற்றியது. அது பற்றிப் பிற்பகல் சுமார் ஒரு மணிக்குத் தகவல் கிடைத்ததாகக் கடல்துறை, துறைமுகஆணையம் தெரிவித்துள்ளது.

பிலிப்பீன்ஸை நோக்கி சென்றுகொண்டிருந்த கப்பலில் எண்ணெய் சரக்கு இருந்ததாக Reuters கூறியுள்ளது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, சிங்கப்பூர் கடலோரக் காவற்படை, சிங்கப்பூர் கடற்படை ஆகியவற்றின் கப்பல்கள் ஊழியர்களுக்கு உதவ அனுப்பப்பட்டன.

கப்பலிலிருந்த 18 ஊழியர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுத் தீ அணைக்கப்பட்டதாக கடல்துறை, துறைமுக ஆணையம் கூறியுள்ளது.

கப்பல் தீ விபத்து குறித்து ஆணையம் விசாரணை நடத்திவருகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்