Images
  • vulnerable

சிறுவர்கள், மனவளர்ச்சி குன்றியோர் உள்ளிட்ட பலருக்குக் குற்றவியல் சட்ட மாற்றங்களால் மேலும் பாதுகாப்பு

சிங்கப்பூரின் குற்றவியல் சட்டங்கள் காலத்துக்கேற்ப
இருப்பதை உறுதிசெய்யும் விதத்தில் குறிப்பிடத்தக்க
அளவில் மாற்றங்களுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பு வழங்குவதில் மாற்றங்கள் முக்கியமாக கவனம் செலுத்தும்.

தண்டனைகளைக் கடுமையாக்குவதன்மூலம் அது சாத்தியமாகும்.

தாயும் அவரது காதலனும் சேர்ந்து 2 வயது டேனியல் நாசரைக் காயப்படுத்தி மரணத்தை விளைவித்தது,

மனவளர்ச்சி குன்றிய ஆன்னி ஈ (Annie Ee), வீட்டில் தங்கியிருந்தவர்களால் 8 மாத காலம் தினமும் அடித்துத் துன்புறுத்தப்பட்டு இறுதியில் மரணமடைந்தது.

அவர்களைப் போன்ற, எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள், பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டபின் மேம்பட்ட பாதுகாப்பைப் பெறுவர்.

சிறுவயதுப் பிள்ளைகள், இல்லப் பணிப்பெண்கள், உடல், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோர் அவர்களில் அடங்குவர்.

அத்தகையோருக்கு எதிராகக் குற்றம் புரிவோருக்குத் தற்போதைய அதிகபட்ச தண்டனைகள் இரட்டிப்பாகலாம்.

எளிதில் பாதிக்கப்படுவோரை வகைப்படுத்துவது பெரிய சவால்.

அத்தகையோரை வரையறுக்கும் வழியை அரசாங்கம் நாட வேண்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.

பரிந்துரைகளின்கீழ், முதியோருக்கு எதிராகக் குற்றம் புரியும் பராமரிப்பாளர்களோ குடும்ப உறுப்பினர்களோ கடுமையாகத் தண்டிக்கப்படலாம்.

குற்றச்செயல்களின் மாறிவரும் போக்கிற்கேற்ப சூழலைக் கையாள்வதையும் குற்றவியல் சட்டத்தைக் காலத்துக்கேற்ப மாற்றியமைப்பதையும் நோக்கமாகக் கொண்டு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

Top