Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சட்டவிரோத உடல்பிடிப்பு நிலையங்களில் COVID-19 விதிமுறைகள் மீறப்பட்டால் சிறைத் தண்டனைக் கட்டாயாமாக்கப்படுமா?

சட்டவிரோத உடல்பிடிப்பு நிலையங்கள், KTV கூடங்கள் ஆகியவற்றில் நோய்த்தொற்று விதிமுறைகளை மீறுவோருக்குச் சிறைத் தண்டனை கட்டாயாமாக்கப்படுமா என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

வாசிப்புநேரம் -
சட்டவிரோத உடல்பிடிப்பு நிலையங்களில் COVID-19 விதிமுறைகள் மீறப்பட்டால் சிறைத் தண்டனைக் கட்டாயாமாக்கப்படுமா?

(படம்: FRANCK FIFE / AFP)

சட்டவிரோத உடல்பிடிப்பு நிலையங்கள், KTV கூடங்கள் ஆகியவற்றில் நோய்த்தொற்று விதிமுறைகளை மீறுவோருக்குச் சிறைத் தண்டனை கட்டாயாமாக்கப்படுமா என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் எழுத்து மூலம் பதிலளித்தார்.

குற்றங்களுக்கான தண்டனை, செய்யும் தவறுகளுக்கு ஏற்றவையா என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

உடல்பிடிப்பு நிலையங்களுக்கான சட்டத்தின் கீழ் சிறைத் தண்டனை இருந்தாலும் குற்றச் செயலுக்கு என்ன தண்டனை என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கும்.
அந்த உரிமையை நீதிமன்றத்திடம் இருந்து பறிக்கமுடியாது என்றார் அவர்.

பாதுகாப்பு இடைவெளி விதிகளை மீறுவோருக்கு 10,000 வெள்ளி வரை அபராதம், 6 மாதம் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மீண்டும் மீண்டும் அதே குற்றத்தை செய்வோருக்கு 20,000 வெள்ளி வரை அபராதம், ஓராண்டு வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

நோய்த்தொற்று தொடங்கியதில் இருந்து விதிகளை மீறியதற்காகச் சிலர் சிறைக்கு அனுப்பப்பட்டதையும் அமைச்சர் கா.சண்முகம் குறிப்பட்டார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்